Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கேட்காமல் சொல்
 
பக்தி கதைகள்
கேட்காமல் சொல்


ஒரு நல்ல விஷயம்  தெரிந்தால், அதை நாலுபேருக்கு சொல்லி அவர்களையும் பயனடையச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லும் வேடிக்கை கதை.
ஒரு பெண்ணுக்கு இரண்டு தன்னம்பிக்கை பாட்டும், அவற்றின் பொருளும் தெரியும். ஆனால், அது தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். யாருக்கும் தெரிந்தால் அவர்களும் தன்னம்பிக்கை பெற்று முன்னேறி விடுவர் என யாருக்கும் சொல்லாமல் இருந்தாள். கட்டிய கணவனிடம் கூட அதைச் சொல்லியதில்லை. அவன் தன்னை விட புத்திசாலியாகி விடக்கூடாதே என்ற ‘நல்லெண்ணமே’ காரணம். அந்த பாடல்களும், பொருளும் அவளைப் பழிவாங்க எண்ணின. பாடல்கள் இரு செருப்புகளாக மாறி அவள் வீட்டு வாசலில் கிடந்தன. உடனே பாட்டின் பொருள், ஆண்கள் அணியும் சட்டையாக மாறி வீட்டு நாற்காலியில் கிடந்தது. வெளியே சென்ற கணவன் வந்தான். செருப்பை பார்த்து யாரோ வந்திருப்பதாக யூகித்தான். உள்ளே கிடந்த ஆண் சட்டையைப் பார்த்து, “யார் வந்தது?” என மனைவியிடம் கேட்டான். ‘யாரும் வரவில்லையே!’ என அவள் கையை விரிக்க சந்தேகப்பட்டு மனைவியை அடித்தான். வருத்தமுடன் அருகிலுள்ள தர்ம சத்திரத்தில் போய் படுத்தான். அப்போது அந்த சத்திரத்திற்கு ஒவ்வொரு வீட்டிலும் அணைக்கப்பட்ட தீபங்கள் வந்து சேர்ந்தன. கடைசியாக ஒரு தீபம் வந்தது.
கடைசி தீபம் மற்றவைகளிடம், “இதோ! படுத்திருக்கிறானே! இவன் தேவையில்லாமல் மனைவியை சந்தேகப்பட்டவன்’’ என நடந்ததையைச் சொன்னது. அவன் உண்மையை உணர்ந்தான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டதோடு பாட்டையும், பொருளையும் கேட்டான். அவை அவளை விட்டு வெளியேறி செருப்பாகவும், சட்டையாகவும் மாறிவிட்டதால் அவளுக்கும் மறந்து போனது.  பயனுள்ள விஷயங்களை அடிக்கடி பிறருடன் பகிர வேண்டும் என்பது உண்மை தானே!  


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar