|
துறவி ஒருவர் தேவையான பொருட்களைத் துாக்கிக் கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார். செங்குத்தான மலை என்பதால் நடுவழியில் சுமை அதிகமாவதை உணர்ந்தார். மூச்சு முட்டியது அவருக்கு. சற்று துாரம் முன்னால் போனதும், அங்கே ஒரு மலைவாழ் சிறுமியைக் கண்டார். அவள் தன் தம்பியை துாக்கிக் கொண்டு உற்சாகமாகப் பாடியபடி ஏறிக் கொண்டிருந்தாள். துறவிக்கோ ஆச்சர்யம் தாளவில்லை. ‘‘என்னம்மா... இவ்வளவு சிறிய சுமையைத் துாக்கிக் கொண்டே என்னால் மலையே முடியவில்லையே... உன்னால் எப்படியம்மா பாட்டுப் பாடியபடி ஏற முடிகிறது?’’ அதற்கு அவள், ‘‘ஐயா...நீங்கள் துாக்கியிருப்பது ஒரு சுமையை...ஆனால் நான் துாக்கியிருப்பது என் தம்பியை’’ என்றாள். அப்போது தான் துறவிக்குப் புரிந்தது. ‘அன்புக்கு சுமை தெரியாது என்பது நிஜம் தான்’ என்றார்.
|
|
|
|