|
வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டிய நேரத்தில், தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து விட்டு, குத்துதே குடையுதே என சிலர் அவதிப்படுவதுண்டு. இதைத் தான் ‘தவளை தன் வாயால் கெடும்’ என்பர். கிராமத்தைச் சேர்ந்த நாட்டாமை ஒருவரும், அவரது பங்காளியும் வெளியூர் போய்க் கொண்டிருந்தனர். இரவில் காட்டுவழியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் கற்றாழை புதருக்குள் படுத்துக் கொண்டனர். வேகமாக நடந்து சென்ற திருடன் ஒருவனின் கால் நாட்டாமையின் காலில் இடறியது. இருட்டில் ஆள் மறைந்திருப்பதை அறியாத திருடன், ‘இதென்ன பாதையில் நீளமான மரக்கட்டை கிடக்கிறதே? என்றான். அதற்கு நாட்டாமை, “உங்க வீட்டுல மரக்கட்டை இப்படித்தான் இரண்டாயிரம் ரூபாயை வேட்டியில முடிஞ்சிக்கிட்டு படுத்திருக்குமோ?” என்றார். இதைக் கேட்ட திருடர்கள், அவரிடமிருந்த பணத்தை அபகரித்துக் கொண்டனர். இந்த பணம் செல்லுமோ, செல்லாதோ? என்று அவர்களில் ஒருவன் கேட்டான். அதற்கு நாட்டாமை, “விபரம் தெரிந்த என் பங்காளியிடம் கேட்டால் போச்சு” என்றார். உடனே திருடர்கள் பங்காளியிடம் இருந்த பத்து பவுன் நகையை பறித்ததோடு இருவரையும் நையப் புடைத்து விட்டு ஓடினர். தான் கெடுவதோடு, தன்னைச் சேர்ந்தவர்களையும் கெடுப்பதை கொள்கையாக வைத்துள்ளனர்.
|
|
|
|