|
சும்மா இருப்பது எப்படி என்பதை ஒரு மாதத்திற்குள் செயல் மூலம் சீடர்கள் விளக்கம் அளி்க்கும்படி குருநாதர் கட்டளையிட்டார். அதில் வெற்றி பெறுபவரே தனக்குப் பின் குருவாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தார். எல்லா மாணவர்களும் சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பித்தனர். சிலர் பேச்சைக் குறைத்து மவுனமாக இருக்கவும், சிலர் உணவு உண்ணாமல் விரதமிருக்கவும் செய்தனர். சிலர் கண்களை மூடி தியானத்தில் ஈடுபட்டனர். சிலர் தவத்தில் ஈடுபட மலையை நோக்கிப் புறப்பட்டனர். ஒரே ஒரு சீடன் மட்டும் எந்த முயற்சியும் செய்யாமல் வழக்கமான பணிகளில் ஈடுபட்டான். போட்டியின் இறுதி நாள் வந்தது. முடிவை அறிவித்தார் குருநாதர். சீடர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். எந்த முயற்சியும் எடுக்காத மாணவனுக்குத் தான் தலைமைப்பதவி தரப்போவதாக அறிவித்தார். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்தார். ‘‘நீங்கள் அனைவரும் எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள். அதனாலேயே தோல்விக்கு ஆளானீர்கள். அந்தந்த நேரத்தில் தன் கண் முன்வரும் கடமைகளில் ஈடுபட்டு உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே’’ என்றார் குருநாதர். சும்மா இருப்பது என்பது உடலால் மட்டுமல்ல. மனதாலும் சும்மா இருப்பது. நடந்து முடிந்த விஷயத்திற்காக வருந்தாமலும், நாளை நடக்கப் போகும் விஷயத்தை எண்ணிக் குழப்பம் அடையாமலும் இருப்பதே சும்மா இருப்பது.
"ஒன்றை ஆக்குதல் மாற்றுதல் அழித்திடல் எல்லாம் நின்செயல் அன்று காண். உலகில் வேண்டிய தொழிலெலாம் ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ" என்றார் மகாகவி பாரதியார். ‘‘ அர்ஜுனா! இந்த உலகில் உன் செயலாவது ஒன்றில்லை. அதனால் செயலில் ஆசையும், பற்றையும் துறந்து வாழ்க’’ என்றார் கிருஷ்ணர். இது போன்றே சீடனும் நடந்தததையோ, நடக்கப் போவதையோ சிந்திக்காமல் கண் முன் வரும் செயல்களில் பற்று வைக்காமல் ஈடுபட்டான். நாம் ஞானம் பெற ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம்...
இயற்கையை வெல்லும் சக்தி அவர்களுக்கு மட்டுமே உண்டு. அறிவியல் சூழ்ச்சிகளை எல்லாம் முந்திக்கொண்டு அதன் வலிமையே வெல்லும். |
|
|
|