Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பாவமாம்...புண்ணியமாம்
 
பக்தி கதைகள்
பாவமாம்...புண்ணியமாம்


ஒருவர் செய்த பாவ புண்ணியம் அவரது சந்ததியைச் சேரும். வாழ்நாள் முழுவதும் நன்மைகள் செய்தால் வாழையடி வாழையாக நம் சந்ததியும் நலமாக வாழும். ‘சேர்த்து வைத்த புண்ணியம் தான் சந்ததியைக் காக்குமடி’ என்றும் சொல்வார்கள்.   
பாரதப் போரில் பாண்டவர்கள் கிருஷ்ணரின் உதவியால் வெற்றி பெற்றனர்.
கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரன் வருத்தமுடன், ‘‘கிருஷ்ணா...நான் பார்வையற்றவனாக இருந்தாலும் தர்ம வழியில் தான் ஆட்சி புரிந்தேன். அப்படி இருந்தும் இப்போது புத்திரசோகத்தால் வாடுகிறேன்.  என் நுாறு பிள்ளைகளில் ஒருவர் கூட போரில் உயிர் திரும்பவில்லையே. எனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை?’’ எனக் கேட்டார்.  
கிருஷ்ணர் சிரித்தபடி, ‘‘நான் சொல்லும் கதையைக் கேட்டால் உண்மை புரியும்’’ என்றார்.
‘‘நீதி தவறாத மன்னர் ஒருவர் இருந்தார். அவரிடம் சமையல்காரர் ஒருவர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். அவரது கைப்பக்குவம் மன்னருக்கு பிடித்துப் போனது. தன் திறமையைக் காட்டி மன்னரின் மனதில் இடம்பிடிக்க சமையல்காரரும் விரும்பினார். அதற்காக அரண்மனைக் குளத்தில் வசித்த அன்னத்தின் குஞ்சு ஒன்றை யாருக்கும் தெரியாமல் பிடித்து வந்தார். இரவோடு இரவாக மன்னருக்கு சமைத்துக் கொடுத்தார். அது என்ன உணவு என்று தெரியாமல் மன்னர் அதைச் சுவைத்து மகிழ்ந்தார். அடிக்கடி அந்த உணவை சமைத்து தரும்படி கட்டளையிட்டார்.
‘‘மன்னர், சமையல்காரர் இருவரில் தண்டனைக்குரிய நபர் யார்?’’ என திருதராஷ்டிரரிடம் கேட்டார் கிருஷ்ணர்.
‘‘தான் சாப்பிடுவது என்ன  உணவு என்பது கூட தெரியாமல் ருசித்து சாப்பிட்ட மன்னரே குற்றவாளி’’ என்றார் அவர்.  
‘‘நீதிநெறி தவறாத மன்னர் என்பதை நிரூபித்து விட்டீர். அதன் காரணமாகத் தான்  நுாறு மகன்களும், சிறந்த மனைவியும் இப்பிறவியில் கிடைத்தனர். நான் சொன்ன கதையும் உம் முற்பிறவியைப் பற்றியது தான். செய்த பாவம் என்னவென்று இப்போது புரிந்திருக்குமே! தினமும் அன்னத்தின் மாமிசத்தை என்னவென்று தெரியாமல் ரசித்து சாப்பிட்டீர் அல்லவா... இப்படி கண்ணிருந்தும் குருடனாக இருந்ததால் இந்த பிறவியில் இந்நிலைக்கு ஆளாக நேர்ந்துது. குஞ்சுகளை இழந்த தாய் அன்னம் போல பிள்ளைகளை இழந்து  துன்பம் அனுபவிக்க வேண்டி வந்தது’’ என்றார் கிருஷ்ணர்.
‘‘கிருஷ்ணா...முற்பிறவியில் செய்த பாவம் என்னையும், என் பிள்ளைகளையும் தண்டித்து விட்டதே’’ என அழுதார் திருதராஷ்டிரன்.
 இனிமேலாவது நீங்களும் நற்செயல்களில் ஈடுபட்டு பிள்ளைகளுக்கு சொத்தாக புண்ணியத்தை விட்டுச் செல்லுங்கள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar