|
வாழ்க்கை நிலையற்றது மட்டுமல்ல...குறுகியதும்கூட. இந்த உண்மையை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்கினார் நாயகம். இரண்டு கற்களை எடுத்த அவர், ஒன்றை அருகில் எறிந்தார். மற்றொன்றை சற்று தொலைவில் எறிந்தார். பிறகு தோழர்களிடம், “இந்த கற்கள் சொல்லும் பாடம் என்ன?” எனக் கேட்டார். “ இறைத்துாதரான உமக்கு மட்டுமே தெரியும்” என்றனர். “தொலைவில் இருக்கும் கல் மனதில் எழும் ஆசை, எதிர்பார்ப்புகளைக் குறிக்கும். அருகிலுள்ள கல் வாழ்நாளைக் குறிக்கும். அதாவது எதிர்பார்ப்புகளை மனிதன் அடையும் முன்பே வாழ்நாள் முடிந்து விடும்’’ என்றார். என்ன அழகான உவமை! அளவுக்கு மீறி ஆசைகளில் மூழ்கி கனத்த இதயத்துடன் திசை மாறிச் செல்பவர்கள் இந்த உண்மையை உணர்வது நல்லது.
|
|
|
|