Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » வெற்றி பெற்ற மனிதரெல்லாம்...
 
பக்தி கதைகள்
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்...


பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் சமமாகவே வில்வித்தை கற்றுக் கொடுத்தார் துரோணாச்சாரியார். கவுரவர்களில் மூத்தவனான துரியோதனன் பொறாமை மட்டுமல்ல ஆணவமும் கொண்டவன். வில்வித்தையில் ‘நானே சிறந்தவன்’  என்ற மமதையும் அவனுக்கு இருந்தது. ஆனால் வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜூனன் தான் என்பது துரோணாச்சாரியாருக்கு தெரியும். இந்த உண்மையை துரியோதனனுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி அதற்குரிய தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.  
ஒருநாள் பெரிய மாமரத்தின் கீழே அன்று வில் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. மரத்தில் பல பழங்கள் இருந்தாலும் உச்சியில் அளவில் பெரியதான பழம் ஒன்று தொங்குவதைக் கண்டு, துரியோதனனை அருகில் அழைத்தார். அந்தப் பழத்தைப் சுட்டிக்காட்டிய அவர், ‘உனது வில் ஆற்றலால் அதை அடி பார்க்கலாம்’’ என்றார். அவனும் வில்லில் நாணைப் பூட்டி குறி வைத்தான்.
துரோணாச்சாரியார் கேட்டார்: ‘‘துரியோதனா மரம் தெரிகிறதா?’’ என்றார்.
‘‘தெரிகிறது குருவே, கிளைகள் தெரிகின்றனவா?’’
‘‘தெரிகின்றன குருவே!’’
‘‘பழம் தெரிகிறதா?’’
‘‘ தெரிகிறது குருவே!’’
‘‘அடி பார்க்கலாம்’’  என்றார் குரு.
அடித்தான். பழம் விழவில்லை. ஐந்தாறு இலைகள் மட்டும் விழுந்தன. துரியோதனன் தலை குனிந்தான்.
அர்ஜூனனிடம் இதே கேள்விகளை கேட்டார் துரோணாச்சாரியார் .
‘‘நீங்கள் சொன்னது எனக்கு எதுவும் தெரியவில்லை’’ என்றான் அர்ஜூனன்.
‘‘கடைசிக் கேள்விதான் முக்கியம் பழம் தெரிகிறதா?’’எனக் கேட்டார்.
‘‘இல்லை’’  என்றான் அர்ஜூனன். துரியோதனன் துள்ளிக் குதித்தான். பழம் கூடத் தெரியவில்லை. இவன் எப்படி அதை அடிக்கப் போகிறான்? அவன் எதையும் பார்க்கவில்லை. பழத்தின் மீது அடித்தால் அது சிதறிவிடும். அப்புறம் எப்படி குருவுக்கு சமர்பிக்க முடியும்?
அர்ஜூனன் கவனித்தான். பழத்தைத் தாங்கிக் கொண்டிருந்த காம்பை உற்றுக் கவனித்து அதன் மீது அம்பைச் செலுத்தினான். பழம் விழுந்தது. தனது உடையால் ஏந்தி பழத்தைப் பிடித்தான். குருவுக்கு சமர்ப்பிக்க அவரும் மகிழ்ந்தார். துரியோதனன் வெட்கித் தலை குனிந்தான். துரியோதனன் பார்த்தான். பழம் கிடைக்கவில்லை. அர்ஜூனன் கவனித்தான் பழம் கிடைத்தது.  
 வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் வேடிக்கையாக பார்த்தால் வேடிக்கை மனிதர்களாக நாம் சோடிக்கப்படுவோம். எல்லா விஷயத்தையும் கவனிக்க தொடங்கினால் வேடிக்கை மனிதர்களாக இல்லாமல் வெற்றி பெற்ற மனிதராகத் திகழலாம்.  பேசும் போது நாம் ‘‘பார்த்தேன், கவனித்தேன்’’ என்னும் சொற்களை பயன்படுத்துகிறோம். அதற்கு பொருள் ஒன்று என்றும் நினைக்கிறோம்.  பார்த்தல் என்பது மேலோட்டமானது. கவனித்தல் என்பது கண்ணும், கருத்தும் ஒன்றிப் பார்ப்பது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar