|
கோபக்கார முனிவர் ஒருவர் மாறுவேடத்தில் வலம் வந்து கொண்டு இருந்தார். தாகம் ஏற்பட அருகில் தென்பட்ட ஒரு வீட்டில் முன் நின்றார். அது பால்காரரின் வீடு. தண்ணீர் கேட்க அதற்கு பால்காரர், ‘‘ எங்க தேவைக்கே தண்ணீர் இல்லை. இது உமக்கு எங்கே போவது’’ என கோபித்தார். சுற்றும் முற்றும் பார்த்த முனிவர் அருகில் இருந்த சோமபானக்கடையில் தண்ணீர் கேட்டார். அந்த கடைக்காரர் மூச்சு முட்டும் அளவுக்கு ‘குடிங்க...சாமி குடிங்க...’ என்று கொடுத்தார். மகிழ்ச்சியடைந்த முனிவர், ‘தாகத்திற்கு உதவாத பால்காரனைத் தேடி மக்கள் யாரும் வர மாட்டார்கள். வீடு வீடாகச் சென்றே பால் ஊற்ற வேண்டும். வயிறு முட்டக் தண்ணீர் கொடுத்ததால் சோமபானக் கடை எங்கு இருந்தாலும் கும்பல் கும்பலாக மக்களே விரும்பி வந்து குடிப்பர்’’ என வரம் அளித்தார். மதுபானத்தை விரும்புவோரைக் கேலி செய்ய சொல்லப்படும் கதை இது. ஆனால் இந்தக் கதை தமிழகத்தில் நிஜமாகி விட்டது கலியின் கொடுமை தானே!
|
|
|
|