|
ஒரு இளைஞனுக்கு கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒருநாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். ‘‘இனி மேல் கோபம் வரும் போது வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்’’ முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7, பின்பு 5, 2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது. ஒருநாள் ஒரே ஒரு ஆணி அடித்தான். மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான். இனி மேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். அடித்த ஆணிகள் 45 நாளில் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் சொன்னான். ‘‘ஆணிகளை பிடுங்கி விட்டாய்... சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? என அப்பா கேட்க வெட்கித் தலைகுனிந்தான் இளைஞன்.
|
|
|
|