Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கணவன் மட்டுமே கண்ட தாலி
 
பக்தி கதைகள்
கணவன் மட்டுமே கண்ட தாலி

  விஸ்வாமித்திர மகரிஷிக்கு ஒரு கணக்கைத் தீர்க்க வேண்டியிருந்தது. அது அவர் செய்ய வேண்டிய  பிராயசித்தமாகவும் ஆனது. ஆமாம், இக்ஷ்வாகு வம்சத்துக்குத் தான் இழைத்த அநீதிக்கு மாற்று ஏதாவது செய்தால்தான் தன் மனம் ஆறும் என தீர்மானித்தார். உடனே அயோத்தி நோக்கி புறப்பட்டார்.
  போகும் வழியில் தன் ஆணவத்தால் எழுந்த விபரீதங்களை நினைவுகூர்ந்தார்.
  தேவேந்திரன் சபையில் விடுக்கப்பட்ட சவால் அது. பூலோகவாசிகளில் நேர்மையான ஒருவரை கண்டெடுப்பது கடினம் என விஸ்வாமித்திரர் ஆரம்பித்த பேச்சு, வாக்குவாதமாக மாறியது. வசிஷ்டர் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, நேர்மைக்கும், வாய்மைக்கும் உதாரணமாக திகழும் அரிச்சந்திரனை எடுத்துக்காட்டாக அவர் சொன்னார்.
   அலட்சியமாக சிரித்தார் விஸ்வாமித்திரர். அப்படி ஒருவர் இருக்க முடியாது என ஆணித்தரமாகக் கூறினார். ஏதேனும் ஒரு கட்டத்தில் நேர்மையிலிருந்து பிறழும் பலவீனம் கொண்டவர்கள்தான் மனிதர்கள் என வாதிட்டார். வசிஷ்டரும்  பின்வாங்கத் தயாராக இல்லை. நீங்கள் வேண்டுமானால் அவனை சோதித்து பார்க்லாம் என்றார் விஸ்வாமித்திரரிடம்.
  உடனே அவரும் புறப்பட்டு விட்டார். நேராக அரிச்சந்திரனின் நாட்டிற்கு வந்தார். செம்மையாக கோலோச்சிக் கொண்டிருந்தான் அவன். அவனது குடிமக்களெல்லாம் சந்தோஷத்தை தவிர வேறெதையும் அறியாதவர்கள். அங்கே பொய், களவு, சூதுவாது, விரோதம், பகை ஏதுமில்லை. ‘இந்த வாழ்க்கை மக்களுக்கு திகட்டிவிடாதா?’ என வித்தியாசமாக யோசித்தார் விஸ்வாமித்திரர். அவர்களுக்கு வாழ்வின் துன்ப பக்கங்களையும் காட்ட வேண்டும் என நினைத்தார். வலி, வேதனையை உணர்ந்தால், பழியையும், பாவத்தையும் கையில் எடுத்துக் கொள்வார்கள் எனக் கருதினார்.
ஒரு முனிவர் இப்படி அழிவுபூர்வமாக சிந்திப்பது தவறு என்றாலும், வசிஷ்டரிடம் சவால் விட்டு விட்டு வந்ததை நிரூபித்தாக வேண்டும் என்ற விபரீத வேட்கை அவருக்குள் தணியாத நெருப்பாகவே இருந்தது.
காட்டுக்குச் சென்றார். அங்கிருந்த விலங்குகளையெல்லாம் திரட்டி அரிச்சந்திரனின் கோசல நாட்டின் மீது ஏவினார். காட்டு விலங்குகளைக் கண்ட மக்கள் பயந்து ஓடினர்.  வலியால் கதறினர்.
இந்த அவல நிலையைக் கண்ட மன்னன் அரிச்சந்திரன் திடுக்கிட்டான். (நாட்டு மக்கள் வேதனைக் குரல் எழுப்புவதா? அது எப்படி சாத்தியம்?  யாருக்கும் எந்தக் குறையும் இல்லாதபடி நான் ஆட்சி நடத்துகிறேனே! தன் செயல்முறையில் எங்கேனும் தவறு நேர்ந்துவிட்டதோ?  அந்த வேதனை காட்டு விலங்குகளால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டான். உடனே வெகுண்டான் மன்னன்.)
விலங்குகளை வேட்டையாடினான். அவை வந்த சுவடே தெரியாதபடி அடித்து விரட்டினான். காட்டுக்கும், நாட்டுக்கும் இடையே தடுப்பு வேலி அமைத்தான். விலங்குகள் வந்துவிடாதபடி கண்காணிக்க வீரர்களை நியமித்தான். பிறகு காட்டிற்குள் சென்று  விலங்குகள் ஏன் நாட்டிற்குள் வருகிறது என ஆராய ஆரம்பித்தான்.
முயற்சி தோல்வியுற்றதைக் கண்டு கறுவினார் விஸ்வாமித்திரர். காட்டிற்குச் சென்ற அரிச்சந்திரன்  நாட்டிற்குத் திரும்பி விடாதபடி ஒரு திட்டம் தீட்டினார். அழகிய இரு பெண்களை அவன்முன் நடனமாட வைத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த அரிச்சந்திரன் பரிசளிக்க முன்வந்தான். ஆனால் அவர்கள் கேட்ட பரிசோ அவனை திணறடித்தது. ஆமாம், அவர்களை அவன் மணந்து கொள்ள வேண்டுமாம்!
மறுத்தான் மன்னன். ‘எனக்கு ஏற்கனவே மனைவி இருக்கிறாள். அவள் மூலம் பிறந்த பாசமிகு மகனும் இருக்கிறான்,’ என்றான். அப்போது அவர்களுக்கு ஆதரவாக வந்தார் விஸ்வாமித்திரர். ‘‘ஒரு மன்னனாக இருந்துகொண்டு, பலருக்கும் உதவிகளையும், பரிசுகளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் நீ, இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிதான் தரவேண்டும்,‘‘ என்று அடம் பிடித்தார்.
 வேறு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன். இந்தப் பெண்களை மணக்கச் சொல்லி மட்டும் வற்புறுத்தாதீர்கள் என தீர்மானமாக சொன்னான் மன்னன்.
பிடி கிடைத்தது முனிவருக்கு.  ‘‘அதற்கு ஈடாக உன் நாட்டை இவர்களுக்குப் பரிசளிப்பாயா? என்று கேட்டார். அப்படியே தந்தான் அரிச்சந்திரன். அதன் மூலம்  எல்லா கொடிய துன்பங்களுக்கும் ஆளானான்.
  நாட்டை வசப்படுத்திய முனிவர், யாகம் செய்ய பொன் வேண்டும் எனக் கேட்டார். தருகிறேனே என்று சொன்ன, நாடு துறந்த அந்த மன்னன் சட்டென நாக்கை கடித்துக் கொண்டான்.
இளக்காரமாக சிரித்தார் விஸ்வாமித்திரர். எப்படித் தருவாய்? உனக்கென்று என்ன இருக்கிறது? நாட்டையே எனக்கு அளித்துவிட்ட உன்னால் எப்படித் தர முடியும்? என கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டார்.
இன்னும் நாற்பத்தெட்டு நாட்களில்  அதைச் செய்ய முடியும் என சூளுரைத்த அரிச்சந்திரன் தன் மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசனை அழைத்துக் கொண்டு நாட்டை விட்டு  நாடோடியாக வெளியேறினான்.
விஸ்வாமித்திரர் மேலும் திட்டங்கள் வகுத்தார். தனது சீடனான நட்சத்திரேசனை அழைத்தார். அவனை அரிச்சந்திரனிடம் அறிமுகப்படுத்திவிட்டு, ‘‘இவன் உன்னோடு வருவான், நீ பணம் சம்பாதித்துத் தந்ததும் அதை வாங்கிக் கொண்டுவந்து என்னிடம் கொடுப்பான். இவனிடமிருந்து தப்ப முடியாது; அப்படித் தப்பிக்கவும் முயற்சிக்காதே‘‘  என்றார்.
‘‘நான் வாக்கு தவறாதவன். சொன்னதை நிறைவேற்றுவேன். என்னை இப்படியெல்லாம் சொல்லி அவமானப்படுத்தாதீர்கள்’’  என்றான் அரிச்சந்திரன்.  
விஸ்வாமித்திரர் மெல்ல சிரித்தார். பிறகு ரகசியமாகத் தன் சீடனிடம், அரிச்சந்திரன் எந்த வகையிலும் பொன் சம்பாதித்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுமாறு சொன்னார்.
அரிச்சந்திரனுடன் சீடன் காசிக்குச் சென்றான். குறிப்பிட்ட நாள் கெடு முடிந்ததும் நச்சரிக்கத் தொடங்கினான். வழியின்றி மனைவி, மகனை அடிமைகளாக விற்று கிடைத்த பணத்தை சீடனிடம் தந்தான் அரிச்சந்திரன். அப்படியாவது கொடுத்த வாக்கை நிறைவேற்றிடத் துடிக்கும் நாணயஸ்தன் அவன்!
எல்லாம் சரி... இத்தனை நாள் உன்னுடன் சுற்றினேனே...ஏதாவது கொடு என வீம்பு பிடித்தான் சீடன்.
இதைக் கேட்டு அரிச்சந்திரன் எரிச்சல்படவில்லை. ஆனால் அவனுக்குத் தர கைவசம் எந்தத் தொகையும் இல்லையே! வேறு வழியின்றி, தன்னையும் மயானக் காவலன் ஒருவனுக்கு விற்று அந்த பணத்தை சீடனிடம் கொடுத்தான்.
அப்போதைக்கு நட்சத்திரேசனின் பிடி விலகியது. ஆனால் முனிவரின் பிடி மேலும் இறுகியது.
 மகன் லோகிதாசன் பாம்பு தீண்டி இறக்க, அவனை சுடுகாட்டிற்கு கொண்டு வந்து எரிக்க முனைந்தாள், சந்திரமதி. ஆனால் அங்கே அப்போது காவலனாக இருந்த அரிச்சந்திரன் கட்டணம் கொடுத்தால்தான் தகனம் செய்யலாம் என திட்டவட்டமாகச் சொன்னான். அதுவே சட்டம் என்றும் அதை மீற முடியாது என்றான்.
அவன்தான்  கணவர் என்பதை அறியாத சந்திரமதி  தன்னிடம் பணம் இல்லை என வருந்தி அழுதாள்.
உடனே அரிச்சந்திரன், யாரை ஏமாற்றுகிறாய்? உன் கழுத்தில் உள்ள தாலியில் உள்ள பொன்னை காணிக்கையாக கொடு என விரட்டினான்.
உடனே பிரகாசமானாள் சந்திரமதி. அவள் சிறந்த உத்தமி என்பதால் அவளின் தாலி, அவளின் கணவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்ற வரம் அவளுக்கு இருந்தது. இது அவள் பிறக்கும் போதே கிடைத்த வரம். ஆமாம் அவள் பிறக்கும் போதே அந்தத் தாலி அவள் கழுத்தில் இருந்தது. அவளின் பெற்றோருக்கு சந்திரமதி பிறந்தபோது மட்டும் ஒருமுறை தெரிந்த தாலி அவர்களுக்கும் அதற்குப் பிறகு தெரியவில்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar