Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » சீதை சொன்ன நீதி
 
பக்தி கதைகள்
சீதை சொன்ன நீதி

இலங்கை அசோகவனத்தில் சீதை இருந்த போது அரக்கியர்கள் துன்பப்படுத்தினர். அதற்காக அவள் கோபம் கொள்ளவில்லை. பொறுமையுடன் சகித்துக் கொண்டாள்.
துன்பம் என்பது வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்ற உறுதியுடன் இருந்தாள். ராவண வதம் முடிந்ததும் அசோகவனத்தில் இருந்த சீதையிடம் நடந்ததை தெரிவிக்க ஒடி வந்தார் அனுமன். ‘‘தாயே... ராமபிரான் போரில் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் அழிந்தான்” என ஆரவாரம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்து, ‘‘அனுமனே...முன்பொரு நாள் நான் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்த போது ஆறுதல் கூறி காப்பாற்றினாய். சிரஞ்சீவியாக வாழும் பாக்கியத்தை ஏற்கனவே உனக்கு வரமாக அளித்தேன். முன்பை விடவும் அதிக மகிழ்ச்சி தரும் செய்தியை இப்போது சொல்லியிருக்கிறாய். அதற்காக என்ன வரம் வேண்டுமோ... கேள் தருகிறேன்” என்றாள்.

 
‘‘தாயே...வரம் எதுவும் வேண்டாம். நான் விரும்புவது ஒன்று தான். பத்து மாதங்களாக உங்களை துன்பத்திற்கு ஆளாக்கிய இந்த அரக்கியரை நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு அனுமதி கொடுங்கள்” எனக் கேட்டார்.
ஆனால் அந்த கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை.
‘‘அனுமனே.. அரக்கியர் என்னைத் துன்புறுத்தினாலும் அவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம் முன்பு செய்த தீய செயல்களின் விளைவே.

பொன் மானாக வந்த மாயமான் மீது ஆசைப்பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பினேன். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. ‘லட்சுமணா, லட்சுமணா’ என்று அபயக் குரல் எழுப்பினார். பதறிப் போன நான், பர்ணசாலைக்கு காவலுக்கு நின்றிருந்த லட்சுமணனை போய் பார்க்கச் சொன்னேன்.

‘ராமருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது’  என லட்சுமணன் மறுத்துக் கூறியும் நான் ஏற்கவில்லை. கடுஞ்சொற்களை வீசினேன்.

இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமை போல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதே அசோக வனத்தில் நான் அனுபவித்த துன்பங்களுக்குக் காரணம்.

 எனவே அரக்கியரை ஒன்றும் செய்யாமல் விட்டு விடு. அரக்கியர் என்றாலும் அவர்கள் பெண்களே. அவர்களுக்குத் தீங்கிழைத்து பாவத்தைத் தேடிக் கொள்ளாதே” என நல்வழி காட்டினாள். உண்மையை உணர்ந்த அனுமனும் அமைதியடைந்தார்.
நமக்கு ஒருவர் துன்பம் செய்தால் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால் அது தவறு. துன்பம் ஏற்படுவதற்கு காரணம் நாம் செய்த முன்வினை பாவமே. எனவே துன்பத்தை பொறுமையுடன் ஏற்கப் பழக வேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar