|
புதருக்குள் இருந்த பாம்பு ஒன்று உணவைத் தேடி வெளியே புறப்பட்டது. ஒரு வீட்டின் சமையலறைக்குள் நுழைந்தது. பாத்திரங்கள் மீது அது மெல்ல ஊர்ந்த போது ஏதோ ஒரு கூர்மையான பொருள் உடல் மீது படவே பாம்புக்கு காயம் ஏற்பட்டது. சட்டென்று கோபமுற்ற பாம்பு தன்னை வெல்ல யாருமில்லை என்ற ஆணவத்தோடு அந்த கூரான பொருளை கடித்தது. கூர்மையான அந்த பொருள் கத்தி என்பதால் பாம்பின் வாய் கிழிந்தது. கோபம் தலைக்கேற கொல்லும் நோக்கத்துடன் சுற்றி வளைத்து இறுக்க ஆரம்பித்தது.
தன் பலம் முழுவதையும் காட்ட, கத்தியால் வெட்டப்பட்டு ரத்தம் கொட்டியது. பல துண்டுகளாக்கப்பட்ட அது இறந்தது. இதே போல மனிதன் கோபத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் மோசமாக நடக்கிறான். சுடுசொற்களை பிறர் மீது வீசுகிறான். தன் தவறை உணர்ந்து விலகிச் செல்லாமல் மேலும் மேலும் தீங்கு செய்கிறான். கடைசியில் நிம்மதியை இழந்து தவிக்கிறான். தேவையற்ற கோபம், பதட்டம், மன அழுத்தத்தால் மனம், உடல் நலம் கெடுகிறது. கோபம், ஆணவத்தை கைவிடுவோம். நிம்மதியாக வாழ்வோம்.
|
|
|
|