|
அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் ஏதாவது ஒன்றைக் கொண்டு வாருங்கள் என நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. சற்று நேரத்திற்குள் ஒரு மாணவியின் கையில் மலர், இரண்டாவது மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி, மூன்றாவது மாணவியிடம் ஒரு சிறு பறவை இருந்தது. நான்காவது மாணவியோ வெறுங்கையோடு திரும்பினாள். ஏன் என்று கேட்டபோது, “நானும் மலரைப் பார்த்தேன். செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். சிறுபறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமே என்று விட்டுவிட்டேன்” என விளக்கம் அளித்தாள். “அன்பு என்பது இதுதான். மற்றவருக்கு கொடுக்க வேண்டாம். மற்றவர்களின் சுதந்திரத்தை பறிக்காமல் இருந்தால் போதும்’’ என்று சொல்லியபடி மாணவியை அணைத்துக் கொண்டார் ஆசிரியை.
|
|
|
|