|
அலுவலகம் ஒன்றில் வருகையை பதிவு செய்த பணியாளர்கள் அருகில் இருந்த நோட்டீஸ் போர்டை கவனித்தனர். அதில், ‘‘உங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த நபர் நேற்று காலமானார். அவரது உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அஞ்சலி செலுத்த வாருங்கள்’’ என்ற குறிப்பு இருந்தது. அவர் யார் என்பதை அறிய சவப்பெட்டியை நோக்கி விரைந்தனர். அங்கு பார்த்த போது முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று இருந்தது. அதனருகில், ‘‘எதிர்காலத்தை நிர்ணயிப்பவர் நீங்கள்! உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது” என்று இருந்தது. நாம் நினைத்தால் மட்டுமே வாழ்வில் மாற்றம் உருவாகும். மற்றவரைக் குறை சொல்லிக் கொண்டிருந்தால் அது நம்மை நாமே ஏமாற்றும் செயல் என்பதை பணியாளர்கள் உணர்ந்தனர்.
|
|
|
|