Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கவளங்களைக் கேட்ட கண்ணன்
 
பக்தி கதைகள்
கவளங்களைக் கேட்ட கண்ணன்


ஸந்த் பானுதாசர் எழுதிய ‘பண்டரீசே ஸுக’ என்று தொடங்கும் ‘அபங்’ பாடலின் பொருள்.  
‘வைகுண்ட நாயகன் நின்று கொண்டிருக்கும் பண்டரிபுரத்தை தரிசிக்கும் சுகம் அலாதியானது.  தேவர்கள் காண்பதற்கு அரிதானவனாகவும் பக்தர்கள் காண்பதற்கு எளிதானவனாகவும் உள்ள ருக்மணி வல்லபன் இங்கே செங்கல் மீது நிற்கிறான். இங்கு வைணவ பக்தர்கள் ஒன்று கூடி நாம கோஷம் செய்கிறார்கள். இவர்களுக்காக கோபாலன் அன்புடன் ஆடுகிறான். எங்கு பார்த்தாலும் இங்கே பிரம்மானந்தம்தான். நானும் இங்கே ஆனந்தத்துடன் பாடிக் கொண்டிருக்கிறேன்’

‘விட்டலுக்கு நண்பனாக நாமதேவர் போல ஆண்களும் இருந்திருக்கிறார்கள். கானோபாத்ரா போன்ற பெண்களும் இருந்திருக்கிறார்கள் இல்லையா?’  என்று கேட்டாள் சிறுமி மைத்ரேயி.
    ‘அதுமட்டுமில்லை. தோட்டக்காரர் சாவ்தா மாலியும் அவர் நண்பர்தான். கல்வியில் கரை கண்ட ஞானேஸ்வரும் விட்டலனின் நண்பர்தான்’ என்றாள் பத்மாசனி.
    ‘நகைகளைச் செய்யும் கலைஞரும் விட்டலனின் நண்பர்தான். ஊர்த்தலைவரும் அவனது நண்பர்தான். குயவரும் அவரது நண்பர்தான்’  என்றார் பத்மநாபன்.
    ‘அப்போ இவங்களுடைய வரலாறையும் சொல்வீங்களா’  என ஆர்வம் பொங்கக் கேட்டாள் பத்மாசனி.
    ‘நிச்சயமாக. உலகமே ஒரு குடும்பம் தான் என்பதற்கு அற்புதமான எடுத்துக்காட்டு விட்டலனின் விளையாட்டுகள். மகா உபநிஷதத்தில் இடம் பெறும் அற்புத வார்த்தைகள் ‘வசுதேவ குடும்பகம்’.  அதாவது உலகமே ஒரே குடும்பம்தான் என்பது.  சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது போல. ஹிந்து மதம் எனப்படும் சனாதன தர்மம் இதற்கு அற்புதமான எடுத்துக்காட்டு.  அதற்குக் குறிப்பான உதாரணம் விட்டலன்‘ என்ற பத்மநாபன் ஜனாபாயின் வாழ்க்கைச் சரிதத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
...............
‘தன்னையும் கூட சேர்ந்து உணவருந்துமாறு விட்டலன் கூறியிருக்கலாமே’ என்ற சிறிய ஏக்கம் மனதை வாட்டிக் கொண்டிருக்க ஜனாபாய் உண்ணத் தொடங்கினாள்.
    அப்போது அவள் அருகில் ஒரு குரல் கேட்டது. ‘எனக்கும் இரண்டு கவளங்கள் கொடுப்பாயா ஜனா?’.  திரும்பிப் பார்க்க அங்கே விட்டலன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.  
    பிரமித்துப்போய் ஜனாபாய் நிற்க, உரிமையுடன் தானே இரு கவளங்களை விட்டலன் எடுத்து உண்டான்.  மீதி உணவை அவளை சாப்பிடுமாறு வற்புறுத்தினான்.
    பின்னர் ‘இன்று உன்னோடு இதே அறையில் உறங்கப்போகிறேன்’ என்று விட்டலன் கூறினாள்.  ஒரு பக்தைக்கு இதைவிட வேறென்ன பேறு வேண்டும்?  அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் விட்டலன் படுத்துக்கொள்ள அவன் கால்களை இதமாக பிடித்து விட்டாள். விட்டலன் தடுத்தும் கேளாமல் அந்த சேவையை வெகு நேரம் செய்தாள்.  பிறகு ஒரு கட்டத்தில் தன்னை மறந்து உறங்கிவிட்டாள்.
    எழுந்தபோது விட்டலன் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்ததை அறிந்தாள். அதே சமயம் அவளுக்கு இன்னொன்றும் நினைவுக்கு வந்தது.  தினமும் அதிகாலையில் எழுந்து அங்கிருக்கும் இயந்திரத்தில் கோதுமை மாவு அரைப்பது.  அதில்தான் ரொட்டி செய்ய வேண்டும்.
    அவசரமாக அந்த இயந்திரப் பகுதிக்குச் சென்ற போது அங்கே விட்டலன் அமர்ந்து இருந்ததைக் கண்டாள்.  ‘வா ஜனா... உனக்கு பதிலாக நான் இன்று மாவரைக்கிறேன்’ என்றான்.   ஜனாபாய் பதற்றத்துடன் ​மறுத்தாள்.  ‘நீ அபங்கங்களைப் பாடு.  நான் அரைக்கிறேன்’ என்று உத்தரவிடுவது போல் விட்டலன் கூற  ஜனாபாய்க்கு வேறு வழியில்லாமல் போனது. தனது இனிய குரலில் ஆத்மார்த்தமாக அவள் தொடர்ந்து பாட கண்ணன் மாவரைத்து முடித்தான்.
    பின்னர் ‘நான் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே என் பக்தர்கள் காத்திருப்பார்கள்‘ என்றபடி கிளம்பினான். அவன் கிளம்பிய போது அவன் முகத்தில் காணப்பட்ட விஷமச் சிரிப்புக்கான அர்த்தம் ஜனாபாய்க்கு விளங்கவில்லை.
    விட்டலனின் பட்டு பீதாம்பரம் துவைக்கப்பட்டு அந்த வீட்டில் காய வைக்கப்பட்டிருக்க, கந்தல் உடையுடன் விட்டலன் தன் கோயிலில் காட்சியளித்தான். இதன் எதிரொலி பலமானதாக இருந்தது.
    அன்று விட்டலன் சன்னதியின் கதவுகளைத் திறந்த அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.   அவனுக்கு அணிவித்திருந்த பட்டுப் பீதாம்பரத்தைக் காணோம். பதிலாக அவன் உடலை ஒரு கந்தல்  புடவை சுற்றியிருந்தது. விட்டலனைப் பற்றி அறிந்திருந்த அர்ச்சகர்கள் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.  ‘தனது பக்தை யாருக்கோ இரங்கி பட்டுப் பீதாம்பரத்தை அவளுக்கு தானம் அளித்து விட்டு அவளது கந்தல் புடவையை அணிந்து வந்திருக்கிறான் விட்டலன்’  இதுவே அர்ச்சகர்களுக்கு உவப்பானதாக இல்லை. போதாக்குறைக்கு விட்டலன் நகைகளையும் காணோம். ஆக விட்டலனின் பட்டாடைகளோடு நகைகளையும் அந்த பெண் எடுத்துக் கொண்டிருக்கிறாள்.
    சமீபமாக தினமும் ஜனாபாய் கோயிலில் விட்டலன் குறித்து பாடுவதை அறிந்திருந்த அர்ச்சகர்களுக்கு அவள் மீது சந்தேகம் எழுந்தது. நாமதேவரின் வீட்டில் தங்கியிருக்கிறாள் என்பதை அறிந்து அவரிடம் சந்தேகத்தை தெரிவித்தனர். ஜனாபாய் விட்டலனின் விசேஷ பக்தை என்றும் அவளுக்கு எந்த தீய குணமும் கிடையாது என்றார் நாமதேவர்.
    அர்ச்சகர்களின் மனம் சமாதானமாக வில்லை.  நாமதேவர் இல்லாதபோது அவரது வீட்டுக்குச் சென்றனர். ஜனாபாயிடம் தாங்கள் கொண்டு வந்த கந்தல் புடவையைக் காட்டினர்.  அது தன்னுடையதுதான் என்பதை ஒத்துக்கொண்ட ஜனாபாய்  ‘ஏன்தான் விட்டலன் இப்படிச் செய்கிறாரோ! அவரது விலை உயர்ந்த உடையை இங்கே விட்டுச் சென்றுவிட்டார்.  நான் அதைத் துவைத்து வைத்திருக்கிறேன்’ என்றபடி அந்த உடையைக் காய வைத்த இடத்திற்குச் சென்றாள். அங்கே  பீதாம்பரத்தைக் காணவில்லை.
    அவள் திகைத்து நிற்க, அர்ச்சகர்கள் அந்த வீட்டை சோதனையிட்டனர்.  மறைவான ஓரிடத்தில் விட்டலனின் பட்டாடை, நகைகள் இருந்தன. ஜனாபாய்க்கு ஒன்றும் புரியவில்லை.  அர்ச்சகர்கள் அவளை மன்னரிடம் அழைத்துச் சென்றனர்.
    தான் நிரபராதி என்றாள் ஜனாபாய்.  ‘நான் சொல்வது பொய்யானால் என் கண்கள்  குருடாகப் போகட்டும்’ என்றாள்.
    மன்னர் கோபத்துடன், ‘கையும் களவுமாகப் பிடித்த பிறகும் இப்படியெல்லாம் கூறுகிறாளே இவள். நீ கூறுவது பொய்தான்.  நீ குருடாவதுதான் சரி.  காவலர்களே... சூலத்தால் இவளது கண்களைக் குத்துங்கள்’ என கட்டளையிட்டார்.  
    கூர்மையான சூலம் ஒன்றை அவளது கண்களை நோக்கி வேகமாக எடுத்துச் சென்றனர் இரண்டு காவலாளிகள்.  ஆனால் ஜனாபாயை நெருங்கும் முன்பாக சூலம் எரிந்து சாம்பலானது.  மன்னன் அதிர்ச்சியுடன் ஜனாபாயின் மகிமையை உணர்ந்தார்.  அவள் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
    காலப்போக்கில் விட்டலன் அடிக்கடி ஜனாபாய்க்குக் காட்சி தந்தான். நாமதேவர் காரணமாகத்தான் விட்டலன் அடிக்கடி காட்சி தருவதாக கருதிய ஜனாபாய், அவரை தன்  குருவாகவே எண்ணி வாழ்ந்தாள்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar