|
வீரர் அலெக்சாண்டர், தனது தளபதி ஒருவர் மீது கோபப்பட நேர்ந்தது. சட்டென்று, “இன்று முதல் நீ என் தளபதியல்ல! சாதாரண வீரனாக இருந்தால் போதும்,” என்றும்கட்டளையிட்டு விட்டார்.வருத்தப்பட்ட தளபதி, கொஞ்சநாளில் அதை மறந்து விட்டு, கிடைத்த பணியில்ஈடுபாடு கொண்டார்.நீண்டநாள் கழித்து, அலெக்சாண்டர், அந்த முன்னாள் தளபதியைச் சந்திக்க நேர்ந்தது.மன்னருக்கு வணக்கம்தெரிவித்த அவர், தன்பணியில் ஈடுபட்டார்.“கொஞ்சம் கூட மாறுதல் தெரியவில்லையே. முன்னைப் போலவே முகத்தில் சந்தோஷம்தென்படுகிறதே!” எனஆச்சரியப்பட்ட அலெக்சாண்டர் அதை, அந்த முன்னாள் தளபதியிடம் கேட்டும் விட்டார். “மன்னா! தளபதியாக இருந்த காலத்தில் என்னைப் பார்க்கவே வீரர்கள்பயப்படுவார்கள். ஆனால், இப்போது அனைவரிடமும் சகஜமாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களும் என்னிடம் மனம் விட்டுப் பேசுகிறார்கள். அதுவே என் சந்தோஷத்திற்கு காரணம்” என்றார்.“நீ சொல்வதெல்லாம் சரி தான். ஆனால், உயர்பதவியில் இருந்த ஒருவர், கீழ்நிலையில் பணியாற்றுவது அவமானம் இல்லையா?” என்று கேட்டார் அலெக்சாண்டர்.அதற்கு, “மானமும், அவமானமும் அவரவர்மனதைப் பொறுத்தது.பதவியைப் பொறுத்தது அல்ல. நமக்கு தரப்பட்டிருக்கும் பணியை சரியாகச் செய்வது தான் உத்தமமான வாழ்க்கை,” என்றார் வீரன்.இதைக் கேட்ட அலெக்சாண்டர் அந்தவீரனைக் கட்டித் தழுவி மகிழ்ந்தார். “போர் புரியும் வீரர்கள் சோர்ந்து விடும் போது, அவர்களை உற்சாகப்படுத்த உன்னைப் போன்றவர்கள் தளபதியாக இருப்பதுஅவசியம். அதனால், இன்று முதல் நீ தளபதியாகவே செயல்படலாம்” என்று பறித்த பதவியையும் கொடுத்தார்.
|
|
|
|