Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » நன்றி மறந்தால்..
 
பக்தி கதைகள்
நன்றி மறந்தால்..

கவுதமன் என்பவன் வேலையின்றி ஊர் சுற்றி எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்தான். கயவர் கூட்டத்தோடு பழகினான். விலங்கு, பறவைகளை வேட்டையாடி சாப்பிடக் கற்றுக்கொண்டான். ஒருநாள் பொருள் தேடும் ஆசையுடன் வெளியூருக்கு புறப்பட்டான். போகும் வழியில் மதம் பிடித்த யானை ஒன்று துரத்தவே, திக்கு தெரியாமல் காட்டிற்குள் ஓடி தப்பித்தான். அன்றிரவு ஒரு ஆலமரத்தடியில் உறங்கினான். மறுநாள் பிரம்மலோகத்தைச் சேர்ந்த நாடீஜங்கன் என்னும் கொக்கு அம்மரத்தின் மீது வந்து அமர்ந்தது. அதன் சிறகுகள் தங்கமாக மின்னியது. உடல் வைடூரியமாக ஜொலித்தது. தேவலோக பறவையான அது உதவும் எண்ணத்துடன் கவுதமனை விசாரிக்க ஆரம்பித்தது.
 ‘‘எனது ஆருயிர் நண்பனான விருபாட்சன் பக்கத்து தேசத்தில் அசுரர்களின் தலைவனாக இருக்கிறான். அவனைச் சந்தித்தால் உனக்கு பெருஞ்செல்வம் கிடைக்கும்’’ என வழிகாட்டியது.
கவுதமனும் புறப்பட்டான். அந்த சமயத்தில் ஆயிரம் அந்தணர்களுக்கு தானம் அளிக்க ஏற்பாடு செய்திருந்தான் விருபாட்சன். கவுதமனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். விருந்து வழங்கியபின் வேண்டுமளவு செல்வத்தை கருவூலத்தில் இருந்து எடுத்துச் செல்ல விருபாட்சன் உத்தரவிட்டான்.  
சுமக்க முடியாத அளவிற்கு பொன்னும், நவமணிகளையும் மூடையாக கட்டிக்கொண்டு புறப்பட்டான் கவுதமன். வழியில் ஏற்கனவே தங்கிய ஆலமரத்தடியை அடைந்தான். அவனைக் கண்டதும் கொக்கு மகிழ்ச்சி அடைந்தது.
 நீண்ட துாரம் நடந்த களைப்பால் பசியுடன் இருந்த அவனுக்கு தீய எண்ணம் எழுந்தது.  கொக்கை கொன்று அதன் மாமிசத்தை சாப்பிட ஆசைப்பட்டான். கொக்கால் கிடைத்த நல்வாழ்வை மறந்தான். கொக்கை அம்பால் குறி வைத்து தாக்கினான். தீயில் சுட்டு மாமிசத்தை ருசித்தான். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விருபாட்சன் கொதித்தான்.  தன் நண்பனைக் கொன்ற கவுதமனைக் கொன்று மாமிசத்தை அசுரர்களுக்கு உணவாக இடுமாறு உத்தரவிட்டான். நன்றி மறந்த கொடியவனின்  மாமிசத்தை சாப்பிட மாட்டோம் என அசுரர்கள் மறுத்தனர். பின்னர் அவனது உடலை விலங்குகளுக்கு இரையாக்க உத்தரவிட்டான். ஆனால் அவையும் சாப்பிடாமல் விலகிச் சென்றன. நன்றி கெட்டவனை விலங்குகள் கூட ஏற்பதில்லை. நன்றி மறப்பது நல்லதல்ல! 


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar