|
‛அர்ஜுனா... நீயும் நானும், போர்க்களத்திலுள்ள இந்த அரசர்களும் இல்லாத காலம், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எதுவுமில்லை. அழியாத, நித்தியமான ஆன்மாவின் பொருளான உடல் அழிந்து போவது உறுதி. எனவே முன்னோக்கிப் போரிடு’ என்றார் பகவான் கிருஷ்ணர் இந்த ஆன்மாவை தாங்கி கொண்டிருக்கும் பொருள் தான் உடல். இது விரைவில் அழிந்து போகக் கூடியது. படைப்பின் ரகசியம் பற்றி பேசும் போது, அழியாத, அளவிட முடியாத, அனைத்திலும் வியாபித்திருக்கும், நித்தியமான ஒரு ‘உயிருள்ள பொருள்’ பற்றி பேசுகிறார். உடல் அழியும்; ஆனால் ஆன்மாவான உயிர் அழியாது. அடிப்படையில் நாம் இரண்டு பகுதிகளால் ஆனவர்கள். முதல் பகுதி உடலும் மனமும். இந்த உடலும், மனமும் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கிறது, அர்ஜூனன் பெற்ற அவஸ்தைகள் போல! நாம் பெறும் அறிவு என்பது அனுபவம்; இதை வார்த்தைகளால் விளக்க முடியாது. இரண்டாவது பகுதி உடல் மட்டும்; இது அழிந்து போகும். உடல், மனத்துடன் ஒருவரை அடையாளம் காண்பதை கைவிட்டு உடலை மட்டுமே பார்க்குமாறு அர்ஜூனனிடம் கூறினார் கிருஷ்ணர். போரிடுமாறு கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்யும் பகுதிகளை பகவத்கீதையில் புரிந்து கொள்வது சிரமமானது. சிலர் குருேஷத்திர போரே நடக்கவில்லை என்கிறார்கள். நாம் அன்றாடம் அனுபவிக்கும் வாழ்க்கை போராட்டம் தான் அந்த போராக விளக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். அர்ஜுனன் விலகுவதன் மூலம் போர் முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. விழிப்பு(கவனம்), உணர்தல் என்னும் ஆயுதங்களைக் கொண்டு போரை எதிர்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணர் வாதிடுகிறார். அகங்காரத்தை விட்டொழிக்காத வரை, போரில் இருந்து பின்வாங்கினாலும் விரக்தியின் வடிவமாகவே அர்ஜூனன் இருப்பார் என்பது கிருஷ்ணருக்கு தெரியும். எனவே இந்த உடல், ஆன்மா ஆகியவற்றின் வேறுபாட்டை உணர்ந்து போரில் ஈடுபடுமாறு அர்ஜூனனை கேட்டுக் கொண்டார் கிருஷ்ணர். (நிறைவு பெற்றது)
|
|
|
|