உள்ளடக்கத்திற்குச் செல்க
ஈரோடு கோயில்கள் கோயில்கள்
கோயில் தோற்றம்
கோயில் தோற்றம்

கனகாசல குமரன்

எழுமாத்தூர், ஈரோடு, தமிழ்நாடு

மூலவர் · கனகாசல குமரன்

வழி பகிர் தொடர்பு படங்கள்

தரிசன நேரம்

காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் தகவல்

மூலவர்
கனகாசல குமரன்
உற்சவர்
-
அம்மன்/தாயார்
-
தல விருட்சம்
-
தீர்த்தம்
-
பழமை
-
மாவட்டம்
ஈரோடு
மாநிலம்
தமிழ்நாடு

முகவரி

அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோயில், எழுமாத்தூர், ஈரோடு மாவட்டம்.

தொலைபேசி: +91

வரைபடத்தில் பார்க்க

கோயில் சிறப்பு
மருமகன் முருகன் கோயிலில், மாமன் பெருமாளுக்கு சன்னதி அமைந்திருப்பது சிறப்பு.
தல வரலாறு
ஒரு முறை பத்தரை மாற்றுத் தங்கத்துக்காக, அகத்திய முனிவரின் அறிவுரைப்படி புலிப்பாணிச் சித்தர் இந்த மலையைக் குடைந்தபோது, முருகக் கடவுளின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், ஏழரை மாற்றுத் தங்கம் மட்டுமே அவருக்குக் கிடைத்ததாம். எனவே இந்த ஊர் ஏழரைமாற்றூர் என அழைக்கப்பட்டு, பிறகு ஏழரைமாத்தூர் என மருவி, தற்போது எழுமாத்தூர் என மாறிவிட்டதாகச் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள். மலையின் பெருமையை அறிந்த ஊர்மக்கள், மலை உச்சியில் முருகப்பெருமானுக்குக் கோயில் எழுப்பினர். தங்கத்தைத் தந்த மலை என்பதை உணர்த்துவதற்காக, கனகாசலக் குமரன் எனும் திருநாமம் சூட்டி, கந்தக் கடவுளை வழிபடத் துவங்கினர். பிறகு, காடு-கரைகளை நிறைக்கச் செய்யவும், மாடு-கன்றுகளை பெருக்கச் செய்யவும் மலையில் கிருஷ்ணருக்குக் கோயில் எழுப்பினார்கள். பாமா ருக்மிணி சமேதராக அழகு ததும்ப அருள்பாலிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
தல பெருமை
ஏழு கன்னிமார்களுடன் இலந்தை மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானும் அற்புதத் தரிசனம் தருகிறார். இங்கு வந்து அண்ணன் விநாயகரை வணங்கித் தொழுதுவிட்டு, கனகசாலக் குமரனைக் கண்ணாரத் தரிசனம் செய்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்; வீட்டில் பொன்னும் பொருளும் சேரும் என்பது ஐதீகம்! தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள். செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது கோயிலைச் சேர்ந்த கன்றுக்குட்டி தானாகவே மலையேறிச் சென்று, பூஜை செய்யும் காட்சியைக் கண்டு சிலிர்த்துப் போகிறார்கள்! பக்தர்கள்.
பிரார்த்தனை
பக்தர்கள் இங்குள்ள கனகசாலக் குமரனை வணங்கினால், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்; வீட்டில் பொன்னும் பொருளும் சேரும் என்பது ஐதீகம்!
நேர்த்திக்கடன்
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
திருவிழாக்கள்
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம்
பூஜைகள்
-
எப்படிச் செல்வது?

ரயில்

ஈரோடு

பேருந்து

ஈரோடு மாவட்டத்தில், ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது எழுமாத்தூர்.

விமானம்

திருச்சி

தங்கும் வசதி

ஈரோடு

ஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91-424-222 66 11.
கல்யாண் லாட்ஜ் போன்: +91-424-225 83 01.
ஹோட்டல் மெரிடியன் போன்: +91-424-225 93 62.
ஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91-424-427 14 01.