|
அருள்மிகு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
விஜய ஜெய சாமுண்டீஸ்வரி |
|
ஊர் | : |
புதுப்பட்டினம் |
|
மாவட்டம் | : |
காஞ்சிபுரம்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
ஆடிவெள்ளி, பங்குனி உத்திரம் |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
எப்போதும் போர்க்கோலத்தில் காணப்படும் சாமுண்டீஸ்வரி இத்தலத்தில் தவக்கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 5 மணி முதல் மணி 9 வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி திருக்கோயில்
புதுப்பட்டினம் கிராமம், கல்பாக்கம், காஞ்சிபுரம். |
|
| | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
அம்மனுக்கு வலப்புறம் பஞ்சமுக கணபதியும் , இடப்புறம் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமண்யரும் உள்ளனர். இங்குள்ள ஈசன் ஆனந்தபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பிகை ஆனந்தவல்லிக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. மண்டபத் தூண்களில் பதினெட்டுச் சித்தர்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, எலுமிச்சை மாலை சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
இங்கு அன்னை விஜய ஜெய சாமுண்டீஸ்வரி தாமரைக் கமலத்தில், வலது கையில் ஜப மாலையுடன் தவக் கோலத்தில் அமர்ந்து எட்டுக் கரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறாள். |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
மகிஷாசுரனை வெற்றி கொண்ட அம்பிகை, விஜய ஜெய சாமுண்டீஸ்வரியாக இங்கு காட்சி தருகிறார். மகான்களும் முனிவர்களும் இங்கு தவம் செய்ததால் தபோவனம் என்றும், சித்தர்களின் இருப்பிடமாக இருந்ததால் சித்தர்கள் பூமி என்றும் முற்காலத்தில் இந்த இடம் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. இத்தலம் வருவோர் வாழ்வில் ஆனந்தம் பெருகும் என்பதால் ஆனந்தபுரி என்றும் கூறப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்தபின், அன்னை சாமுண்டீஸ்வரி இத்தலத்திற்கு வந்து தவமிருந்ததாக ஐதிகம். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
எப்போதும் போர்க்கோலத்தில் காணப்படும் சாமுண்டீஸ்வரி இத்தலத்தில் தவக்கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|