இங்குள்ள நரசிம்மர் உயிரோட்டத்துடன் இருப்பதாகவும், அவர் விடும் மூச்சுக்காற்றில் ஒரு தீபம் அசைவதாகவும், மற்றொன்று அசையாமல் இருப்பதாகவும் உள்ளது என்பது இத்தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்
வாடபல்லி, நல்கொண்டா, ஆந்திர மாநிலம்.
போன்:
+91 99088 04566
பொது தகவல்:
விஜயவாடாவில் உங்கள் பயணம் காலை 6 மணிக்கு துவங்கட்டும். இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ளது மங்களகிரி பானக நரசிம்மர் கோயில். காலை 8மணிக்கு இங்கிருந்து 60 கி.மீ.தூரத்திலுள்ள வேதாத்ரியை 2மணி நேரத்தில் அடையலாம். இங்கு 12 மணி வரை தரிசனம் செய்யலாம். வேதாத்ரியில் மதிய உணவுக்குப் பின், மட்டபல்லி செல்லுங்கள். மாலை 4 மணிக்கு அடைந்து விடலாம். இங்கு தரிசனம் முடித்து அருகிலுள்ள ஹுசூர்நகரில் இரவு தங்கலாம்.
காலை 6 மணிக்கு இங்கிருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள வடபல்லியை அடையலாம். இங்கு செல்லும்முன் அர்ச்சகருக்கு போன் செய்யுங்கள். வடபல்லியில் இருந்து கேதவரத்துக்கு 60 கி.மீ., இங்கு அர்ச்சகர் இருப்பதில்லை. அருகிலுள்ள வீட்டிலுள்ள வாட்ச்மேன் கோயிலைத் திறந்து காட்டுவார். மலைக்கோயிலுக்கு செல்ல விரும்பினால், உள்ளூர் ஆட்களின் துணையைக் கேளுங்கள். மாலை 3 மணிக்குள் தரிசனம் முடித்து கிளம்புங்கள். விஜயவாடாவை 6 மணிக்குள் அடைந்து விடலாம்.
சென்னையில் இருந்து... 12077- சென்னை-விஜயவாடா (ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 7 மணி. இது தவிரவும் சில ரயில்கள் உள்ளன.
புதுச்சேரியில் இருந்து... 22403-புதுச்சேரி- டில்லி (டில்லி எக்ஸ்பிரஸ்)- புதன் காலை 9.05 மணி. 12868- புதுச்சேரி-ஹவுரா (ஹவுரா எக்ஸ்பிரஸ்)- புதன் பகல் 12.30 மணி. 12897- புதுச்சேரி- புவனேஸ்வரம் (புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்) புதன் மாலை 6.30 மணி.
கோவையில் இருந்து... 12625-திருவனந்தபுரம் -டில்லி (கேரளா எக்ஸ்பிரஸ்)- தினமும் இரவு 7.55 மணி. 13352-ஆலப்புழை -தன்பாத் (தன்பாத் எக்ஸ்பிரஸ்)- தினமும் காலை 11.55 மணி. 12522-எர்ணாகுளம்- பிர்வானி (பிர்வானி எக்ஸ்பிரஸ்) - வெள்ளி காலை 10.10 மணி. 12969-கோவை-ஜெய்ப்பூர் (ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ்) வெள்ளி காலை 9.15 மணி. 16323-திருவனந்தபுரம்- விஜயவாடா(ஷாலிமர் எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, ஞாயிறு அதிகாலை 1.25மணி
மதுரையில் இருந்து... 12641- கன்னியாகுமரி- நிஜாமுதீன் (திருக்குறள் எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 11.45 மணி. 12651- மதுரை- நிஜாமுதீன் (சம்பக் கிராந்தி எக்ஸ்பிரஸ்) - திங்கள், சனி இரவு 11.35 மணி. 12666- கன்னியாகுமரி-ஹவுரா (கேப் ஹவுரா எக்ஸ்பிரஸ்)- சனி பகல் 12.35 மணி. 16787- திருநெல்வேலி-ஜம்முதாவி (ஜம்முதாவி எக்ஸ்பிரஸ்)- வெள்ளி, திங்கள் இரவு 7மணி. 14259- ராமேஸ்வரம்-வாரணாசி (வாரணாசி எக்ஸ்பிரஸ்)- புதன் இரவு 8.05 மணி.(வழி: மானாமதுரை)
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள நரசிம்மரை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
நரசிம்மருக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம் செல்லும் ஆந்திர மக்கள், இந்த நரசிம்மரை வணங்கிய பிறகு கிளம்பினால் நற்பலன் விளையும் என்கின்றனர். ஆந்திராவில் நல்கொண்டா, கிருஷ்ணா, குண்டூர் மாவட்ட மக்கள் இவரை வணங்கியபிறகே, பிற கோயில்களுக்குச் செல்வதை ஐதீகமாகக் கொண்டுள்ளனர். ஆன்மிக உபன்யாசகர், முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார், 1992ல் இந்தக் கோயிலில் யாகம் ஒன்றை நடத்தினார். அதன்பிறகு, இந்தக் கோயில் மிகவும் வளர்ச்சியடைந்தது. அளவில் சிறியது என்றாலும், உயிரோட்டமுள்ள நரசிம்மரின் தரிசனத்தால் பக்திப்பரவசத்தில் பக்தர்களை மூழ்க வைக்கும் கோயில் இது. வாடபல்லி சிறிய கிராமமாக உள்ளது. கிருஷ்ணா மற்றும் மூசிநதிகள் இணைந்து எல் வடிவில் காட்சியளிப்பது விசேஷம். ஆந்திராவின் பஞ்ச நரசிம்மத் தலங்களில் இதுவே முதலாவதாகப் போற்றப்படுகிறது. ராமன், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சுதைச் சிற்பமாக அழகே வடிவாய் காட்சி தருகின்றனர். லட்சுமி தாயார் தனியாக உள்ளார். இங்குள்ள கருடன், அனுமன்வாகனங்கள் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக உள்ளன.
தல வரலாறு:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகத்திய முனிவர், சில விக்ரகங்களை அன்னபூர்ணா காவடியில் வைத்து மூன்று உலகங்களுக்கும் சென்றார். பூலோகம் வந்த அவர், கிருஷ்ணா மற்றும் மூசி நதிகள் இணையும் இடத்திற்கு வந்தார். அப்போது அசரீரி ஒலித்தது.அகத்தியரே! இந்த நதிகள் சேருமிடத்தில் நரசிம்மரின் விக்ரகம் ஒன்று உள்ளது. அதை இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்த பிறகு, உங்கள் பயணத்தைத் தொடருங்கள், என்றது. அகத்தியர் சைவராயினும், இந்த இறைக்கட்டளையை ஏற்று, அந்த இடத்தில் நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார். இதையறிந்த வியாசமகரிஷி இங்கு வந்தார். நரசிம்மர் மிகவும் உக்ரமாக இருப்பதை உணர்ந்தார். ஏனெனில், நரசிம்மரிடமிருந்து மூச்சு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இரண்யனை வதம் செய்த கையோடு, உக்ரம் தணியும் முன், அவர் இங்கு வந்திருக்கவேண்டும், அதனால் தான் பெருமூச்சு வெளிப்படுகிறது என்று ஊகித்தார். நீண்டகாலத்துக்குப் பிறகு மன்னர்களுக்கு இந்த நரசிம்மரின் வரலாறு தெரிய வந்தது. அவர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இதன் பிறகு கோயில் சிதிலமடைந்து, சிலையும் புதைந்து போனது. நான்காம் நூற்றாண்டில் மீண்டும் இந்தக் கோயில் பற்றிய விபரம் வெளியே தெரிய வந்தது. ரெட்டி ராசுலு என்பவர் இப்பகுதியில் ஒரு நகரத்தை உருவாக்கினார். இதற்காக, ஆங்காங்கே குழிகள் தோண்டிய போது, உள்ளிருந்த விக்ரகம் வெளிப்பட்டது. கி.பி.1377ல், இங்கு அவர் ஒரு கோயிலைக் கட்டி, அதில் நரசிம்மரை பிரதிஷ்டை செய்தார். அப்போதும், நரசிம்மரிடமிருந்து மூச்சு வெளிப்படுவதை அறிந்த அர்ச்சகர், இதைச் சோதிப்பதற்காக மூக்கின் அருகில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தார். நரசிம்மரின் மூச்சுக்காற்றில் தீபம் அசைந்தது. அதேநேரம், அவரது பாதம் அருகில் ஏற்றி வைத்த தீபம் நிலையாக எரிந்தது. இப்போதும், இந்த விளக்குகள் இவ்வாறு எரியும் அதிசயத்தைக் காணலாம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள நரசிம்மர் உயிரோட்டத்துடன் இருப்பதாகவும், அவர் விடும் மூச்சுக்காற்றில் ஒரு தீபம் அசைவதாகவும், மற்றொன்று அசையாமல் இருப்பதாகவும் உள்ளது என்பது இத்தலத்தின் சிறப்பு.
இருப்பிடம் : மட்டபல்லி நரசிம்மர் கோயிலில் இருந்து ஹுசூர்நகர் வழியாக குண்டூர் செல்லும் ரோட்டில் 100 கி.மீ., கடந்தால் மிரியாலக்குடா என்ற ஊர் வரும். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ., சென்றால் வாடபல்லியை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
விஜயவாடா
அருகிலுள்ள விமான நிலையம் :
விஜயவாடா
தங்கும் வசதி :
விஜயவாடாவில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.