Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காயாரோகணேஸ்வரர்
  ஊர்: காஞ்சிபுரம்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்  
     
 தல சிறப்பு:
     
  இது ஒரு குரு ஸ்தலம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம்.  
   
போன்:
   
  +91 99940 56438 
    
 பொது தகவல்:
     
  பைரவி என்னும் துறவி இனத்தவர் வழிபட்ட லிங்கபேசம் என்ற லிங்கமும் இங்குள்ளது, துர்க்கை சந்நிதியும்  இங்குள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண யோகம்,  குழந்தைபாக்கியம் உண்டாக இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

கைகூப்பிய குரு: இது ஒரு குரு ஸ்தலம். பிருகஸ்பதியாகிய குரு, இத்தலத்தில் சிவனை  வழிபட்டு சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார்.  தேவகுருவான இவர் காயாரோகணேஸ்வரருக்கு எதிரில் மேற்கு நோக்கி  வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இவரது கைகள்  மார்புக்கு நேராக குவிந்த நிலையில் உள்ளது. குருவின் அருள் இருந்தால் தான் ஒருவரின் வாழ்வில் திருமண யோகம்,  குழந்தைபாக்கியம் உண்டாகும். அவருக்குரிய வியாழக் கிழமையில், இங்கு வழிபட்டால்  நன்மை உண்டாகும்.

எமதர்ம ஈஸ்வரர்: காயாரோகண தீர்த்தத்தின் மேற்குக் கரையில்  எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் தனிக் கோயிலாக அமைந்துள்ளது. எமதர்ம ஈஸ்வரர் என இவர் அழைக்கப்படுகிறார். நெய்தீபம் ஏற்றி இவரை வழிபட மரணபயம் நீங்கும். 

பெரியவர் வழிபட்ட சிவன்: காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 13வது பீடாதிபதியான சத்சித்கனேந்திர சரஸ்வதி சுவாமி கி.பி.272ல் இக்கோயிலில் சிவனோடு ஐக்கியமாகி  ஸித்தி பெற்றார். இதன் காரணமாக, காஞ்சிப்பெரியவர்  சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, ஆண்டுதோறும் தவறாமல் இங்கு வழிபடுவதை தன் வழக்கமாக கொண்டிருந்தார்.

 
     
  தல வரலாறு:
     
  புண்டரீக மகரிஷி, சிவபெருமானை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய தவத்தை ஏற்ற சிவன், வேண்டிய வரத்தை தருவதாக வாக்களித்தார். மகரிஷி சிவனிடம், ஐயனே! மனிதனின் உயிர் மட்டுமே  முக்தி இன்பம் (பிறவாநிலை) பெறும். உடலோ மண்ணோடு மண்ணாகி விடும். நான் உயிரால் மட்டுமல்ல, உடம்போடும் முக்தி பெற விரும்புகிறேன். தாங்கள் எனக்கு அந்த பாக்கியத்தை அருள வேண்டும், என்று கேட்டார். சிவனும் அவருடைய காயத்தை (உடம்பை) தன்னோடு தழுவி ஏற்றார். இதனால் காயாரோகணேஸ்வரர் என்று பெயர் பெற்றார். காயம்+ஆரோகணம்+ஈஸ்வரர் என்று இந்தச்சொல்லைப் பிரிக்கலாம். காயம் என்றால் உடம்பு. ஆரோகணம் என்றால் தழுவுதல். ஈஸ்வரர் என்றால் சிவன். பக்தனை உடலோடு தழுவிய சிவன் என்பதே சமஸ்கிருதத்தில் காயாரோகணேஸ்வரர் ஆயிற்று. கோயிலுக்கு தெற்கில் காயாரோகணத்தீர்த்தம் உள்ளது. இதற்கு தாயார்குளம் என்றும் பெயருண்டு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இது ஒரு குரு ஸ்தலம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar