Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சேவுகப் பெருமாள்
  ஊர்: முத்தாதிபுரம்
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரியில் தசாவதாரம்  
     
 தல சிறப்பு:
     
  கருவறையில் ராமபிரானின் பாதங்களை வைத்து வழிபடுவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில், முத்தாதிபுரம், கமுதி, ராமநாதபுரம் மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  கருவறைக்கு எதிரில் காவல் தெய்வம் கருப்பசாமி, கோட்டைச்சாமி, சோனையன் மற்றும் சிறு தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர். பேச்சியம்மன், இருளாயி போன்ற பெண் தெய்வங்களும் உள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் அனைவரும் இங்குள்ள இறைவனை பிரார்த்தனை செய்தால் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள கருப்பசாமிக்கு பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இவ்வாலயத்தின் கருவறையில் நமக்கு தரிசனம் தருவது ராமபிரானின் பாதங்கள் மட்டுமே, அவற்றைத் தாங்கும் பீடத்தின் முகப்பில், பாதங்களை சுமப்பது போல அனுமனின் திருவுருவம் அமைந்துள்ளது. இங்கே நரசிம்மரின் சாந்நித்யம் இருப்பதாகவும் கூறுகின்றனர். கருவறைக்கு எதிரில் காவல் தெய்வம் கருப்பசாமி, கோட்டைச்சாமி, சோனையன் மற்றும் சிறு தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர். பேச்சியம்மன், இருளாயி போன்ற பெண் தெய்வங்களும் உள்ளனர். இந்த கோயில் மிகவும் சக்திவாய்ந்தது என்பது இங்கு வழிபட வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. சேவுகப் பெருமாளை மனம் உருகி வழிபட்டாலே போதும்; துன்பங்கள் அனைத்தும் பறந்தோடிவிடும். நம்பிக்கையோடு வழிபட்டவர்களை பெருமாள் ஒருபோதும் கைவிட்டதில்லை.  
     
  தல வரலாறு:
     
  நெல்லை மாவட்டத்திலுள்ள ஒரு தம்பதிக்கு வெகு நாட்களாகப் பிள்ளைப் பேறில்லை. பல தலங்களுக்குச் சென்றும் பரிகாரங்கள் செய்தும் பயனில்லை. அவர்கள் இங்கே வந்து வழிபட்டபோது, நிச்சயம் உங்களுக்கு பிள்ளைச் செல்வம் அருளுவேன் என்று அருள்வாக்கு உரைப்பவர் மூலம் வயிற்றில் சத்தியம் செய்தாராம் பெருமாள். இறைவன் அருளால் அடுத்த ஆண்டே அந்த தம்பதியர் இல்லத்தில் மழலைச் செல்வம் தவழ்ந்தது. அந்தக் குடும்பத்தினர் தவறாமல் வந்து பெருமாளை வணங்கிச் செல்கின்றனர். இதுபோன்ற அனுபவங்கள் பல பக்தர்களின் வாழ்விலும் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இது பெருமாள் கோயிலென்றாலும், ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று இங்கு சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடத்தப்படுகின்றன. மகா சிவராத்திரியன்று, அருகிலிருக்கும் பெருமாளின் சகோதரியான பாம்பழம்மன் கோயிலிலிருந்து பூஜைப் பொருட்கள் அடங்கிய பெட்டி கொண்டு வரப்படும். அதில்தான் இறைவனுக்குமுன் படைக்கப்படும் சாட்டை, வேல்கம்பு முதலான ஆயுதங்கள் இருக்கும். நள்ளிரவில் பூசாரி தீக்குண்டம் இறங்கும் காட்சி காண்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும். இதற்காக ஆலய பூசாரி மூன்று மாதங்கள் கடுமையான விரதங்கள் மேற்கொள்வார். வாயில் துணி கட்டிக்கொண்டு கோயிலுக்குள் பூசாரி சென்றதும் திரையிட்டு மறைத்து விடுவார்கள். உள்ளே சிரத்தையுடன் பூஜை செய்யும் அவர், சற்று நேரம் கழித்து திரைச்சீலையை விலக்கிக்கொண்டு ஆவேசத்தோடு வெளியே பாய்ந்து வருகிறார். உக்கிரம் சற்று தணிந்தபின் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லுகிறார். முற்காலத்தில் ஈட்டிமீது அமர்ந்து அருள்வாக்கு உரைப்பார்களாம். நள்ளிரவில் ஆரம்பிக்கும் சிறப்புப் பூஜை அடுத்த நாளும் தொடர்ந்து நடைபெறுகிறது. இரண்டாம் நாள் பாரிவேட்டையன்று இறைவனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். காவல் தெய்வமான கருப்பசாமிக்கு கிடா வெட்டி வழிபாடு நடத்துகிறார்கள். கோயிலிலேயே உயிர் நீத்த பூசாரி ஒருவருக்கும் தனிப்பொங்கல் வைக்கிறார்கள். இங்குள்ள காவல் தெய்வங்களால், இதுவரை இப்பகுதியில் எந்தப் பொருளும் களவு போனதில்லை என்கிறார்கள். அப்படி திருட வந்தவர்கள் தெய்வ தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதுபோல, நீதி தவறுபவர்களையும் தெய்வம் நேரில் தண்டிக்கும்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் ராமபிரானின் பாதங்களை வைத்து வழிபடுவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar