சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. தைப்பொங்கலன்று சாகம்பரி என்ற காய்கறி பழ அலங்காரத்தில் அம்பிகை காட்சி தருவாள். வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவம், சூரசம்ஹார விழா 7 நாள், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும்.திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இங்குதான் சூர சம்ஹார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
இங்கு முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,
குண்டுக்கரை-623 501
ராமநாதபுரம் மாவட்டம்.
போன்:
+91 9786266098
பொது தகவல்:
கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது.
பிரார்த்தனை
இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை இங்கு அழைத்து வந்து வழிபட்டு தீர்த்தம் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கிறது.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன், சிவனே முருகன். இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும்.
தல வரலாறு:
300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும்'' என கூறி மறைந்தார். ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலையானின் பெயரான "சுவாமிநாதன்' என்று பெயர் சூட்டினார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்பாலிக்கிறார்.