சங்கட ஹர சதுர்த்தி, கார்த்திக்கை, பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
தல சிறப்பு:
ராகு, கேது, சனி, குரு பெயர்ச்சிகளின் போது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.
திறக்கும் நேரம்:
தினமும் காலை 6 முதல் பகல் 10 மணி, மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை நடை திறந்திருக்கும். செவ்வாயில் மதியம் 2.30 முதல் மாலை 4 மணி, வெள்ளியில் காலை 10.30 முதல் 12 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்
இரயில்வே காலனி, மதுரை.
போன்:
+91 97908 02852
பொது தகவல்:
இங்கு ஸ்ரீசெல்வவிநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், சொக்கநாதர், மீனாட்சி, துர்க்கை, காலபைரவர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், சித்திவிநாயகர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
அனைத்து செல்வங்களையும் அருள இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ராகு, கேது, சனி, குரு பெயர்ச்சிகளின் போது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா, மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அனைத்து நாட்களும் இரவு கோயிலில் சொற்பொழிவு நடக்கிறது. கோவிந்தராஜ பட்டாச்சார்யார், கவிஞர்கள் பாலசுப்ரமணியன், விஜயராமன், இளங்கோ சுவாமி, பொன்னையாசுவாமி, சாவித்ரி, சண்முகதிருக்குமரன், காளிமுத்து, மனோகரன் தினமும் மாறி, மாறி ஏதாவது ஒரு தலைப்பில் பேசுகின்றனர்.
தல வரலாறு:
எண்பது ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் விநாயகர் சிலை தென்பட்டது. அருகில் இருந்தவர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அதை எடுத்து வழிபட துவங்கினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ராகு, கேது, சனி, குரு பெயர்ச்சிகளின் போது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.