ஆண்டுதோறும் சித்திரை விழாவின் போது, மீனாட்சி கல்யாணத்தன்று இங்கும் கல்யாண உற்சவம் நடக்கும். விநாயகர்சதுர்த்தி, நவராத்திரி உற்சவங்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்பு:
தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் இருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். சங்கட ஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி உட்பட விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் நடை திறந்திருக்கும்
இக்கோயிலில் கவுரிசங்கர், ஆதிசிவன், ஸ்ரீகாலபைரவர், ஆஞ்சநேயர், தம்பதி சமேதராக நவக்கிரகங்கள், லட்சுமி, சரஸ்வதி, ஈஸ்வரி, விஷ்ணுதுர்க்கைக்கு தனி சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
சங்கடங்களை போக்கவும், சந்தோஷத்தை வரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்
நேர்த்திக்கடன்:
மாதந்தோறும் சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கும், தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கும், செவ்வாய், வெள்ளியில் விஷ்ணு துர்க்கைக்கும், மூலநட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும், பிரதோஷத்தன்று ஆதிசிவனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஆறுபதாண்டுகளான போதும், வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு மட்டும் குறைவில்லை.
தல வரலாறு:
1953ல் கோட்ட மேலாளர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்ட போது, ஆலமரத்தடியில் ஸ்ரீசக்திவிநாயகர் சிலையிருந்தது. அதை கோயிலாக ஊழியர்கள் உட்பட மக்கள் வழிபட துவங்கினர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் இருப்பது சிறப்பு.