சஷ்டி, ஏகாதசி, சங்கட ஹர சதுர்த்தி, கார்த்திகை, அமாவாசை தினங்களில் 40 ஆண்டுகளாக கூட்டு வழிபாடு, பஜைகள், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கிறது.
தல சிறப்பு:
காயத்திரி தேவிக்கு தனி சன்னதி உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்
நெசவாளர் காலனி, திருநகர், மதுரை.
போன்:
+91 98942 72465
பொது தகவல்:
மூலஸ்தானத்தில் விநாயகரும், முன் மண்டபத்தில் முருகன், நாகர் சிலைகள் உள்ளன. பிரகாரத்தில் சூரிய பகவான், காய்த்ரி, துர்க்கை, தட்ஷிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், குருவாயூரப்பன், அன்னபூரணி, நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
திருமண தடை நீங்க, நோய்கள் குணமடைய, கடன் சுமை குறைய இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வெள்ளிக்கிழமையில், தாமரை திரியில் நெய்தீபம் ஏற்றி, தாமரை மலர் படைத்து, புடவை அணிவித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
மூலவர் விநயாகருக்கு சங்கடஹர சதுர்த்தியன்று பூஜைகள், கூட்டு வழிபாடு நடக்கும். அன்று நெய்விளக்கேற்றி, அருகம்புல் மாலை அணிவித்தால் வேண்டும் வேண்டிய வரங்கள் கிடைப்பதுடன் குறிப்பாக நீண்ட காலமாக வேலை கிடைக்காதர்வர்களுக்கு வேலை கிடைக்கும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், இங்கு காயத்திரி தேவிக்கு தனி சன்னதி உள்ளது. ஐந்து முகங்கங்களுடன், 10 கரங்களுடன், தாமரை மலர்மேல், இடதுகால் மடக்கி, வலது கால் தரையில் வைத்த கோலத்தில் அமர்ந்துள்ளார். கரங்களில் தாமரை மலர்கள், சங்கு, சக்கரம், அங்குசம், சாட்டை, கதை, அன்ன பாத்திரத்துடன் காட்சியளிக்கிறார்.
சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அபிஷேகம் செய்தால், ஞாபக மறதி நீங்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். பவுர்ணமியன்று சிறப்பு பஜை, கூட்டு வழிபாடு நடக்கிறது. ஆஞ்சநேயருக்கு அமாவாசையன்று வடைமாலை சாத்துப்படி செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், நோய்கள் தீரும். கடன் சுமை குறையும். மனம் நிம்மதி பெறும். வேம்பு, அரசு, வில்லவ மரங்கள் இணைந்துள்ள மரங்களின் அடியிலுள்ள பிள்ளையாருக்கு அமாவாசை தோறும், திருப்புகழ் மாதர் சங்கம் சார்பில் 108முறை வலம் சென்று பஜனைகள் நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ல் காய்த்ரிக்கு ஆண்டு விழா நடக்கிறது.
தல வரலாறு:
1962ல் காலனி உருவான போது சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இக்கோயிலில் 1979ல் கும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:காயத்திரி தேவிக்கு தனி சன்னதி உள்ளது.