சுப்பிரமணிய சுவாமி கோயிலில்க்களின் போது நடைபெறும் சூரசம்ஹாரம் லீலை நிகழ்ச்சியும், சம்ஹாரத்திற்கான புராண கதைகூறும் நிகழ்வும், சொக்கநாதர் கோயில்முன்புதான் நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 8 முதல் பகல் 12 மணிவரை மாலை 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் வளாகத்தில் நெல்லி மர விநாயகர், கன்னிமூல கணபதி, தட்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், அண்ணாமலையார், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளனர்.
ரிஷப வாகனத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரர், பார்வதியை,
அக்னியின் நின்று தரிசனம் செய்யும் விநாயகர், முக்குறுணி விநாயகர், கற்பக
விருட்ஷ மரத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள பார்வதி, பரமேஸ்வரனை
வணக்கிய நிலையில் பெருமாள், பிரம்மா நின்ற கோலத்தில், துவார பாலகர்கள்
எழுந்தருளியுள்ளனர். சொக்கநாதர் எதிரே நந்தியும், வளாகத்தில் விநாயகர்,
மயில் வாகனத்தில் முருகப் பெருமான், பூத வாகனத்தில் போர்க் கோலத்தில்
விநாயகர், யானையின்மீது தேவேந்திரன், அண்டரா பரணர், உக்கிர மூர்த்தி,
கத்திக்கு பதிலாக கதையுடன் வீரபாகு சிலைகள் அமைந்துள்ளன.
பிரார்த்தனை
சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்,
நேர்த்திக்கடன்:
பூஜைகள் முடிந்து முதல் பந்தியில், சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
தலபெருமை:
சொக்கநாதர் கோயிலில் மூலவர்கள் சொக்கநாதர், மீனாட்சி அம்மன் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இருவர் சன்னதியிலும் நந்திகள் உள்ளன. மீனாட்சி அம்மன் சுதந்திர சக்தியாக திகழும் ஸ்தலங்களில் எல்லாம் அவர் முன்பு நந்தி இருப்பது ஐதீகம். இங்கும் மீனாட்சி அம்மன் சக்தியாகதிகழ்வதால், அவர் முன்பு நந்தி உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், அம்மன், சுவாமி சன்னதிகளில் மூலவர்கள் எழுந்தருளியிருப்பது போன்று இங்கும் எழுந்தருளியுள்ளனர். தினம் இரண்டுகால பூஜைகள் நடக்கிறது. மார்கழி மாதம் நெல்லி மர விநாயகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பிரதோஷ நாட்களில் சொக்கநாதருக்கு அபிஷேகங்கள், பூஜைகள் நடக்கிறது. வியாழக்கிழமைகளில் குரு பூஜையும், சிவராத்திரியன்று சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.
தல வரலாறு:
தல வரலாறு: கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திரப் பொருளை உபதேசம் செய்தார். அம்பாளின் மடியில் குழந்தையாக இருந்த முருகப்பெருமானும் அந்த மந்திரத்தை கேட்டு விட்டார். பிரணவ மந்திரத்தை குரு முலமாக கற்பதுதான் முறை. தற்செயலாக உபதேசம் கேட்டாலும், அதையம் தவறாகவே கருதிய முருகப் பெருமான், மந்திரத்தை முறையா கற்க வேண்டும் என்ற நோக்கில், அதை உபதேசிக்க வேண்டும்மென வேண்டி, திருப்பரங்குன்றம் வந்து தவமிருந்தார். சிவபெருமான் அவர்முன் தோன்றி காட்சிதந்து பரிகார மந்திரம் அருளினார். அந்த இடமே தற்போது ஆதி சொக்கநாதர் கோயில் அமையப்பெற்று, அங்கு ஆதி சொக்கநாதராக சிவபெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சுப்பிரமணிய சுவாமி கோயிலில் க்களின் போது நடைபெறும் சூரசம்ஹாரம் லீலை நிகழ்ச்சியும், சம்ஹாரத்திற்கான புராண கதைகூறும் நிகழ்வும், சொக்கநாதர் கோயில்முன்புதான் நடக்கிறது.