Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சக்தி விநாயகர்
  தல விருட்சம்: வில்வம்
  ஊர்: திருப்பூர்
  மாவட்டம்: திருப்பூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரைக்கனி, சங்கடஹர சதுர்த்தி, ஆயுதபூஜை, ஆடி பெருக்கு, நவராத்திரி மற்றும் புத்தாண்டு நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  நாமக்கல், பழனிக்கு அடுத்தபடியாக அம்மன் மடியில் விநாயகர் (சக்தியின் மடியில் விநாயகர்) காட்சி தருவது சிறப்பு. தமிழ்நாட்டில் மூன்றாவது இடம் இங்கு தான்; லிங்கோத்பவருக்கு எதிரே வில்வம் அமைய பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.00 மணி முதல் 11.00 மணி மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சக்தி விநாயகர் கோயில் தியாகி குமரன் காலனி, புதுராமகிருஷ்ணாபுரம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர்.641 607.  
   
போன்:
   
  +91 94888 37111, 99421 22256 
    
 பொது தகவல்:
     
  கிழக்கு பார்த்து அம்மன் சிலை உள்ளது. அம்மனுக்கு வலதுபுறம் தஷ்ணாமூர்த்தி, இடது புறம் துர்க்கை  பின்புறம் லிங்கோத்பவர், அவருக்கு எதிரே தலவிருட்சகமான வில்வ மரம் உள்ளது. இசான மூலையில்  நவக்கிரகம் உள்ளது. கன்னிமூல கணபதி, சுப்ரமணியருக்கு தனி சன்னதி உள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழில் சிறக்கவும், பயத்தை போக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சோடஷதிரவியங்களால் அபிஷேகம், தேங்காய் உடைத்தும், பட்டுப்புடவை சார்த்தியும், திருமாங்கல்யம் அளித்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். சோடஷதிரவியங்களால் அபிஷேகம், தேங்காய் உடைக்கும். 
    
 தலபெருமை:
     
 
திருப்பூர் மாவட்டம் என்பதால், திருப்போர். கோவில் அமைந்துள்ள இடம்  தியாகி குமரன் காலனி. திருப்பூரில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தனலட்சுமி மில் செயல்பட்டு வந்தது.  இங்கு, வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருக்க 1972 ல் வீட்டுமனைகள் கட்டப்பட்டன.  திருப்பூர் குமரன் நினைவாக தியாகி குமரன் காலனி என பெயரிடப்பட்டது. காலத்தால் மருவி குமரன்  காலனி என பெயர் மாற்றம் பெற்று விட்டது.

கோயிலுக்கு பின்னால் 26 சென்ட்டில் நந்தவனம் அமைந்துள்ளது. அங்கே கருநாக சர்ப்பம்(பாம்பு) உள்ளது. பக்தர்கள் அம்மனுடைய சக்தி வடிவமாக கருதிகிறார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  விநாயகர் கோயில் மட்டும்  1971-ல் அமைந்தது. கோயில் கட்ட வந்த ஸ்தபதி வித்தியசமாக சிலை செய்து வைத்து விடுங்கள் என கூறியிருக்கிறார். கோயில் நிர்வாகிகள் தந்தரகிரி மலையில் உள்ள சாம்பசிவ அய்யர் என்பவரிடம், குறி கேட்டுள்ளனர். அவர், தவறில்லை  சக்தியின் மடியில் விநாயகர் வைப்பது சிறப்பானது தான் என கூறியிருக்கிறார். சந்தேகம் ஏற்பட்டு  மூன்று முறை குறி கேட்டு, அதே பதில் வந்துள்ளது. 2000ம் ஆண்டு கோயிலை விரிவாக கட்டியுள்ளனர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: நாமக்கல், பழனிக்கு அடுத்தபடியாக அம்மன் மடியில் விநாயகர் (சக்தியின் மடியில் விநாயகர்) காட்சி தருவது சிறப்பு. தமிழ்நாட்டில் மூன்றாவது இடம் இங்கு தான்; லிங்கோத்பவருக்கு எதிரே வில்வம் அமைய பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar