சங்கடஹராசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி கொலு, வாரம்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு.
தல சிறப்பு:
இங்குள்ள விநாயகர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சந்ததி காக்கும் சர்க்கரை விநாயகர் திருக்கோயில், கீழவீதி, டவுன் போலீஸ் நிலையம் அருகில், திருவாரூர் 610001.
போன்:
+91 9943503876
பொது தகவல்:
கோயிலின் மேற்குப் பக்கம் ராஜகோபுரம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் 100 பேர் அமர்ந்து முதற் கடவுள் விநாயகரை தரிசிக்கும் வகையில் உள்ளது. விநாயகர் மேற்குப் பக்கம் தியாகராஜரை பார்த்த வண்ணம் ராஜ அலங்காரத்தில் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
திருமணத்தடை, புத்திரபாக்கியம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கவும், நினைத்த காரியம் கைகூடவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
108 தேங்காய் உடைத்து நெய் தீபம் ஏற்றினால் திருமணத் தடை அகலும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க சக்கரை,முக்கனி, சொர்ண அபிஷேகம் செய்தும், திராட்சை, ஏலம், வெற்றிலை, வெண்டை, தேங்காய் வைத்து படைத்தும், உகந்த மலரான வெள்ளெருக்கு, தும்பை, செம்பருத்தி மற்றும் அருகம் புல் படைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
விநாயகர் சுயம்புவாக அருள்பாலித்த போது தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜசோழன், இங்குள்ள விநாயகரை வழிபட்டபின் தான் எவ்வித காரியத்தையும் துவங்கியுள்ளார். அதன்பின் அவர் வம்ச வழியினர் குடும்பத்தில் குதுகலம் தழைத் தோங்கியது. சந்ததிகளை காத்ததால் சக்கரை வைத்து வழிபட்டதால் பின்னாளில் சந்ததி காக்கும் சக்கரை விநாயகர் என அழைக்கப்பட்டு தற்போதும் அழைக்கப்படுகிறது. கோயில் மகாமண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து உற்று நோக்கினால் நம்மிடம் பேசுவது போல் உணர முடியும். வேலையில்லாதவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து வெற்றி அடைந்துள்ளனர். அதற்காக பலர் நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர்.
தல வரலாறு:
வசிஷ்ட ரிஷியின் பத்தினியான அருந்ததிதான் விநாயகருக்கு முதலில் மோதகம் செய்து நிவேதனம் அளித்தார் என புராணம் கூறுகிறது. அந்த வகையில் திருவாரூர் கீழ வீதியில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக விநாயகர் இப்பகுதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விநாயகர் பெருமானை வணங்கி வெற்றியடைந்தவர்கள், சந்ததியினர்களும் வெற்றி அடைந்ததால், வெற்றியில் திளைத்தவர்கள் வெல்லத்தை படைத்து வழங்கியுள்ளனர். அதுவே பின்னாளில் சந்ததி காக்கும் சக்கரை விநாயகர் என அழைக்கப்பட்டார். மனுநீதிச் சோழன் ஆரூரில் நகர் வலம் வரும் போது இந்த விநாயகப் பெருமானை வழிப்பட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இத்தகவலறிந்த தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜசோழன் குடும்பத்தில் உள்ளவர்களின் நோய் தீர்க்கப்பட்டதால், இங்குள்ள விநாயகரை வழிபட்டு எந்த காரியத்தையும் துவங்கியுள்ளதற்கான சான்றுகள் உள்ளது. அருணகிரி நாதர் மற்றும் பல அடியவர்களாலும், இந்த சக்கரை விநாயகரை துதித்து வழிபாடலாக இயற்றியுள்ளனர். தற்போது பக்தர்கள் வேண்டுகோளாக தினசரி இந்த விநாயகப் பெருமானை ராஜயோகத்தில் சிறப்பித்து வருகின்றனர். வெள்ளி கவசத்தில் இரட்டைப்பிள்ளையார்கள் அருள்பாலிப்பதால் பல்வேறுப்பகுதியில் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள விநாயகர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.