இருகிராமங்களின் மையப்பகுதியில் கோயில் அமைந்திருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளியில் முழு நேரம் கோயில் நடை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆதி அய்யனார் திருக்கோயில்
மேட்டுநீரேத்தான், மதுரை.
போன்:
+91 96884 17579
பொது தகவல்:
கோயிலில் உள்ளே கொடிமரம், மண்டபம், மூலவர் சன்னதி, கோயில் உள் பிரகாரத்தில் அய்யனார் சுதை சிற்பம் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
கேட்ட வரும் தரும் அய்யனார் சுவாமி, சோணையா சுவாமியை (19 அடி உயரம்) வணங்க வரும் பக்தர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கிறது.
நேர்த்திக்கடன்:
நேர்த்திக்கடன் நிறைவேற்ற கிடாவெட்டு அதிகளவில் நடக்கிறது.
தலபெருமை:
மேட்டுநீரேத்தான் ஆதி அய்யனார் கோயில் புராதன சிறப்பு மிக்கது. இக்கோயில் மேட்டுநீரேத்தான் - வாடிப்பட்டி நீரேத்தான் மக்களுக்கு பாத்தியப்பட்டது. இருகிராமங்களின் மையப்பகுதியில் கோயில் அமைந்திருப்பது சிறப்பு. இக்கோயிலின் வீடு வாடிப்பட்டி நீரேத்தானில் உள்ளது. புரட்டாசியில் கோயில் விழா இரு நாட்கள் நடக்கும். விழா நடத்துவது குறித்து இரு கிராமத்து பெரியோர் கோயிலுக்கு சென்று அய்யனாரிடம் உத்தரவு கேட்பர். பல நேரங்களில் கேட்டதும் உத்தரவு கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காது. இதையடுத்து அடுத்த வாரம் கேட்பர். உத்தரவு கொடுத்தால் 15 நாள் சாட்டு துவங்கும். காப்பு கட்டிய பின் கிராமத்தவர்கள் வெளியூர் போக மாட்டார்கள். சாட்டுதல் தெரிந்தால் வெளியூர்காரர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி சென்று விடுவர்.
தல வரலாறு:
இக்கோயிலில் குடிகொண்டுள்ள அய்யனார், மலையாள தேசத்தை(கேரளம்) சேர்ந்தவர். இந்தப்பகுதி செழிக்க வேண்டும், என்பதற்காக தன் பாதம் பதிக்க நினைத்து நீரேத்தானை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து அவரது ஒரு பாதம் கேரளாவிலும் மற்றொரு பாதம் நீரேத்தானிலும் பதிந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு மேட்டு நீரேத்தானில் படைத்தளம் இருந்தது. அதன் தளபதியிடம் அய்யனார் கனவில் தோன்றினார். மலையாள தேசத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து இப்பகுதியை செழிப்படைய செய்கிறேன். நான் வீற்றிருக்கும் பொருட்டு எனக்கு கோயில் எழுப்பும், என உத்தரவிட்டதாக ஐதீகம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இருகிராமங்களின் மையப்பகுதியில் கோயில் அமைந்திருப்பது சிறப்பு.