ஆண்டுதோறும் பங்குனி 3வது வெள்ளி காப்பு கட்டி, 4வது வெள்ளி திருவிழா கொண்டாடப்படுகிறது. வருஷாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், நவராத்திரி, ஆடி 3வது வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, பைரவாஷ்டமி, அனுமன் ஜெயந்தி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்டுகிறது.
தல சிறப்பு:
கோயில்களில் பொதுவாக மூலவரை ஈசான்ய திசையை நோக்கியிருக்கும்படி பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால் இங்குள்ள அம்மன் கிழக்கு பார்த்து அமர்ந்திருந்தாலும் ,முகம் மட்டும் சிவனின் திசையான ஈசானிய திசை நோக்கி திரும்பியிருப்பது சிறப்பு. காளியம்மன் என்றாலே உக்ர தெய்வம் என்பார்கள். ஆனால் இங்குள்ள காளி குழந்தை வடிவில் இருப்பதால் இவளை அனைவரும் குழந்தை காளி என்றே அழைக்கின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்,
காந்தி தெரு, நேருநகர், பைபாஸ்ரோடு,
மதுரை 625 016.
போன்:
+91 93441 50952, 83443 94036, 90928 44726
பொது தகவல்:
கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோயிலின் வெளியே இடது பக்கம் விநாயகரும், முருகனும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோயில் நுழைவு வாயிலின் மேற்பகுதியில் ஐந்து கலசத்துடன் கூடிய சாலக்கோபுரம் உள்ளது. அதில் காளியம்மன் சிம்ம வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் உள்ளாள். அதன் கீழ் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண அமைப்பு சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
அம்மன் இங்கு குழந்தை காளியாக அருள்பாலிப்பதால், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள். அத்துடன் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் இவளை வழிபாடு செய்துவிட்டு பள்ளியில் சேர்த்தால் குழந்தை கல்வியில் சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்க சந்தனக்காப்பு அலங்காரம் செய்தும், பொங்கல்படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கோயிலில் அனைத்து தெய்வங்களும் இருப்பது சிறப்பு. காளியம்மன் மூலஸ்தானத்தின் இருபுறமும் விநாயகரும், முருகனும் உள்ளனர். தெற்கு பக்கம் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியும், மீனாட்சி சுந்தரேஸ்வரரும், வடக்கு பக்கம் துர்க்கையும், உற்சவ மூர்த்தியும், பிரதோஷ மூர்த்தியும், கால பைரவரும் உள்ளனர். பைரவருக்கு எதிரில் ஆஞ்சநேயர் வணங்குபவர்க்கு வணக்கம் சொல்லும் வகையில் நின்ற கோலத்தில் உள்ளார். கோயிலின் ஈசான்ய பகுதியில் நவக்கிரகங்களும், கோயிலின் நடுவில் அம்மனின் சிம்ம வாகனமும் பலிபீடமும் அமைந்துள்ளது.
தல வரலாறு:
பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்கள் கோயில் வழிபாட்டிற்காக பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதையறிந்த இப்பகுதியை சேர்ந்த நல்ல உள்ளங்கள் இப்பகுதியிலேயே கோயில் கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். அதனடிப்படையில் மக்களைக்காக்கும் பராசக்தியை பிரதிஷ்டை செய்து வழிபடலாம் என நினைத்து திருவுளச்சீட்டு எழுதி போட்டு குழந்தை எடுத்த போது, காளியம்மன் அருட்பார்வை கிடைத்தது. காளியம்மன் என்றாலே உக்கிர தெய்வம் என்பார்கள். ஆனால் முதன் முதலில் காளியம்மன் திருவுளச்சீட்டை குழந்தை எடுத்ததால் அன்றிலிருந்து இங்குள்ள காளி "குழந்தை காளி" வடிவில் அருள் பாலித்து வேண்டுபவர்க்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கி வருகிறாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கோயில்களில் பொதுவாக மூலவரை ஈசான்ய திசையை நோக்கியிருக்கும்படி பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால் இங்குள்ள அம்மன் கிழக்கு பார்த்து அமர்ந்திருந்தாலும் ,முகம் மட்டும் ஈசானிய திசை நோக்கி திரும்பியிருப்பது சிறப்பு. காளியம்மன் என்றாலே உக்ர தெய்வம் என்பார்கள். ஆனால் இங்குள்ள காளி குழந்தை வடிவில் இருப்பதால் இவளை அனைவரும் குழந்தை காளி என்றே அழைக்கின்றனர்.
இருப்பிடம் : மதுரை காளவாசல்-பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் நேருநகர் நேதாஜி ரோட்டில் காந்தி தெருவில் கோயில் அமைந்துள்ளது. மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எல்லீஸ் நகர் பாலம் வழியாக 2 கி.மீ. தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.