சனிக்கிழமைகளில் மாலையில் சேவை கால பூஜைகள் நடக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். புரட்டாசி மாதம் பெரிய திருவோணத்தன்று நடைபெறும் திருமஞ்சனத்தை பக்தர்கள் காண முடியும். மார்கழி முழுவதும் திருப்பாவை, திருவெண்பாவை, சுப்ரபாதம் பாடப்படும். 27ம்நாள் பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றும் வைபவம் நடக்கும். பங்குனி மாதம் பெருமாள், பெருந்தேவி தாயார் திருக்கல்யாணம் நடக்கும். ஆடிப்பூரத்தன்று பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாண வைபவமும், வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கும்.
தல சிறப்பு:
மூலவர், நின்ற கோலத்தில் தனியாக காட்சியளிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் எதிரே கருடாழ்வார், இடது பக்கம் விஷ்வக்சேனர், லட்சுமி ஹயக்கிரீவர், தசாவதார சிலைகள், 24 ஷேத்ர பெருமாள் சிலைகளும், ஜெயன், விஜயன் சிலைகளும் உள்ளன. மகா விஷ்ணுவின் ஏகரூப தசாவதாரம், ஸ்ரீவைகுண்டம், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் துலாபாரம், ஆலிலை கண்ணன், குருவாயூரப்பன், தன்வந்திரிபகவான், அஷ்டலட்சுமி, கள்ளழகர், வைஷ்ணவிதேவி, திருப்பதி வெங்கடாசலபதி, பாலகிருஷ்ணன், ராமர் பட்டாபிஷேகம், கீதா உபதேசம், நவநீதகிருஷ்ணன், லட்சுமி நாராயணன், ஆண்டாள், ஹயக்கிரீவர், பாமா, ருக்மணி, கிருஷ்ணர், லட்சுமி வெங்கடாசலபதி, யோகநரசிம்மர் கடவுள்களின் சித்திரங்களும் தத்ரூபமாக காட்சியளிக்கின்றன.
பிரார்த்தனை
மூலவரை வணங்குபவர்களுக்கு நினைத்த காரியம் வெகு விரைவில் கைகூடும்.
நேர்த்திக்கடன்:
மூன்று பவுணர்மிக்கு மூலவருக்கு அர்ச்சனை செய்தால், வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. லட்சுமி ஹயக்கிரீவருக்கு மாணவர்கள் வியாழக்கிழமைகளில் ஐந்து நெய் தீபம் ஏற்றி 108 அர்ச்சனை செய்தால் கல்வியில் சிறப்பான இடம் கிடைக்கும், என்பது ஐதீகம்.
தலபெருமை:
ஸ்ரீபிரசன்ன வரதராஜபெருமாள் கோயிலில் மூலவர் நின்ற கோலத்தில் மார்பில் பெருந்தேவி தாயாருடன் அருள்பாலிக்கிறார். உற்சவர்களாக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் திருவிழாக்காலங்களில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு:
இந்தப்பகுதியிலும் பிரசன்ன வரதராஜபெருமாள் கோயில் கட்டி வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக இக்கோயில் கட்டப்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் நின்ற கோலத்தில் தனியாக காட்சியளிப்பது சிறப்பு.