Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜப்பெருமாள்
  உற்சவர்: தேவநாதப்பெருமாள், யோக ஹயக்ரீவர்
  ஊர்: செட்டி புண்ணியம்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் புதன், வியாழன், சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயில் (தேவநாதப் பெருமாள்), செட்டிபுண்ணியம் - 603 204, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 8675127999 
    
 பொது தகவல்:
     
  நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஹயக்ரீவர் படம் பிரசாதம் மற்றும் பேனாக்கள் கொண்ட பாக்கெட்டை தபாலில் அனுப்பிவைப்பதும் நடைபெறுகிறது.  
     
 
பிரார்த்தனை
    
  கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், திருமணத்தடை நீங்கவும், வியாபாரம் செழிக்கவும், வழிபாடு செய்யப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  யோக ஹயக்கிரீவருக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், துளசி அர்ச்சனை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். இங்கு புதன் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபடுகிறார்கள். இவரை வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்,ஞாபக சக்திகூடும் என்பதுடன் தேர்வு எழுதும்போது துணை நிற்பார் என்பதால் பள்ளி கல்லூரி மாணவ,மாணவியர் ஹால் டிக்கெட் வாங்கிய கையோடு தேர்வு எழுதப்போகும் பேனாவுடன் இங்கு வந்து ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து அவரது ஆசீர்வாதத்துடன் எடுத்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக இது தொடர்வதாலும், வந்து சென்ற மாணவ,மாணவியர் பலன் பெற்றதாலும் தேர்வு நேரத்தில் அதுவும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவியர் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக செட்டி புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே இது பெயர் பெற்றுவிட்டது.

இத்தலத்து ராமர் சிலையின் கணுக்காலில் ஒரு ரட்சை காணப்படுகிறது. இதுபோல் வேறெந்த ராமர் சிலையும் அமையவில்லை. தாடகைவதத்தின்போது ராமருக்குத் திருஷ்டி படாமலிருக்க விஸ்வாமித்திர முனிவர் இந்த ரட்சையைக் கட்டினார் என்று கூறுகிறார்கள்.

செட்டிபுண்ணியம் தலத்துக்குச் சென்று, ஸ்ரீயோக ஹயக்ரீவரையும், ஸ்ரீதேவநாத சுவாமியையும், தாயாரையும், சீதா ராமரையும் வழிபட, குடும்பத்தில் அறிவும் ஞானமும் பெருகும். ஸ்வாமி ஸ்ரீதேசிகனுக்கு ஸ்ரீஹயக்ரீவர் பிரத்தியட்சமாகக் காட்சியளித்து, சகல கலையிலும் கல்வியிலும் மேன்மையடைய அருள்புரிந்தார்.
 
     
  தல வரலாறு:
     
  சுமார் 400 ஆண்டுகள் பழமையான  ஸ்ரீதேவநாத பெருமாள் கோவிலில் வரதராஜப்பெருமாள் மூலவராக இருந்து சேவை சாதித்து வருகிறார். கடந்த 1848-ம் வருடம் திருவஹிந்தபுரத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட தேவநாத பெருமாளும், ஹயக்ரீவரும்,மற்றும் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமரும் பக்தர்களுக்கு உற்சவர்களாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதில் குதிரை முகம் கொண்ட யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருக்கிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar