ஆவணி புனர்பூசம் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, சங்கடஹரசதுர்த்தி, சித்திரை சிவன் அம்மன் திருக்கல்யாணம், பிரதோஷம், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, அனுமன்ஜெயந்தி, குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி. தமிழ் மாத பிறப்பு. கணபதி ஹோமம், தேய்பிறை அஷ்டமி, பைவரவர் பூஜை போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
தல சிறப்பு:
தினசரி காலை 6.45 மணிக்கு கோடீஸ்வரர் மேல் சூரிய ஒளிபடர்வது சிறப்பம்சமாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி (வெள்ளி கிழமைகளில் மட்டும் 7 முதல் 12 வரை 5 மணி முதல் 8 மணி) வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்,
ஆவின்நகர்,கோமதிபுரம் விரிவாக்கம்- 6வது மெயின்ரோடு, மதுரை-625020
நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் பிள்ளையாரும் ஆஞ்சநேயரும், மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். நவக்கிரகங்களில் எந்த கிரகத்தின் தோஷமாக இருந்தாலும், இங்குள்ள விநாயகரையும், ஆஞ்சநேயரையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நவக்கிரக தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது ஐதீகம். படிப்பு, திருமணத்தடை நீங்க, வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக இங்கு முக்கிய பிரார்த்தனையாக உள்ளன.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் துர்க்கைக்கு திருமாங்கல்யம் செய்து அணிவிக்கின்றனர். விநாயகர் முதல் அனுமன் வரை வஸ்திரம் சார்த்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இங்குள்ள விநாயகர், தாய் கோடீஸ்வரி, தந்தை கோடீஸ்வரர், சகோதரர் சுப்ரமணியர் என குடும்பசகிதமாக அருள்பாலிக்கிறார். நாள்தோறும் காலையில் ஆலயத்தின் அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் மாற்றப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
தல வரலாறு:
இந்த விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு 16 வகையான செல்வ வளங்களை அருளும் விதத்தில் வலம் சுழி விநாயகராக உள்ளதால் செல்வவிநாயகர் என பெயர் பெற்றுள்ளார்.
மங்களகரமாக ஆரம்பிக்க விநாயகர் வழிபாடும், மங்கள ஆரத்தி எடுத்து வெற்றிகரமாக முடிக்க அனுமன் வழிபாடும் சிறந்தது. இதனால் தான் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் பிள்ளையாரை முதலில் வழிபட்டு ஆரம்பிக்க வேண்டும்; காரியங்கள் கைகூடிய பின்னர், ராம நாமத்தை ஜெபித்து அனுமனை வணங்கி முடிக்க வேண்டும் என்பது நம் முன்னோர் கூறியுள்ளனர்.
இதன் அடிப்படையில் தான் இக்கோயிலில் விநாயகர் சன்னதியை முதலில் அமைத்து கடைசியில் விநாயகரின் எதிரில் அனுமன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
மகன் செல்வ விநாயகர், அப்பா கோடீஸ்வரன், அம்மா கோடீஸ்வரி என் வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் அள்ளத்தரும் கடவுளர்கள் இங்கு உள்ளதால் வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.
ஒரு மனிதனுக்கு தேவை கல்வி, செல்வம், வீரம். இந்த மூன்றைத்தவிர அனைத்து செல்வங்களையும் பெற இங்கு வரும் பக்தர்கள், விநாயகர் சன்னதியில் ஆரம்பித்து கோடீஸ்வரர், கோடீஸ்வரி, தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை, பைரவர், நவக்கிரகம், அனுமன் என அர்சசனை செய்து வேண்டும் வரங்களை பெற்றுச்செல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தினசரி காலை 6.45 மணிக்கு கோடீஸ்வரர் மேல் சூரிய ஒளிபடர்வது சிறப்பம்சமாகும்.
இருப்பிடம் : மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள கோமதிபுரம் 6வது மெயின்ரோடு கடைசியில் உள்ள ஆவின்நகரில் கோயில் அமைந்துள்ளது. அண்ணாநகர் சுகுணா ஸ்டோரிலிருந்தும் செல்லலாம்.