|
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
வேதபுரீஸ்வரர் |
|
அம்மன்/தாயார் | : |
சவுந்தராம்பிகை |
|
தல விருட்சம் | : |
வில்வம், சந்தனம் |
|
தீர்த்தம் | : |
வேத தீர்த்தம் |
|
புராண பெயர் | : |
திருவழுந்தூர் |
|
ஊர் | : |
தேரழுந்தூர் |
|
மாவட்டம் | : |
நாகப்பட்டினம்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
| பாடியவர்கள்: | |
|
|
|
|
திருஞான சம்பந்தர்
தேவாரப்பதிகம்
வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே யழுந்தை யவரெம் மானே எனமா மடமன் னினையே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 38வது தலம். |
|
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
சித்ரா பவுர்ணமிக்கு பத்து நாள் முன்னதாக கொடியேற்றி தேர் திருவிழாவுடன் முடிகிறது. |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
மாசி 23,24,25 தேதிகளில் மாலை 5.55 முதல் மாøல் 6.05 வரை சூரிய பூஜை நடக்கிறது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊர். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 101 வது தேவாரத்தலம் ஆகும். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
ஒருமுறை பரமேஸ்வரனும், மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஒரு கட்டத்தில், பகடைக்காயில் விழுந்த எண்ணிக்கையில் சந்தேகம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி, பெருமாளுக்கு ஆதரவாக சிவனை குறை கூறினார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக மாற சாபமிட்டார். தன்னால் தானே பார்வதி பசுவாக மாறினார் என்பதால் பெருமாள் மாடு மேய்ப்பவராக அவதாரம் எடுத்து இவ்வூரில் எழுந்தருளினார். எனவே இவ்வூரிலுள்ள பெருமாளின் பெயர் "ஆமருவியப்பன்' என்றானது.
பசுவாக மாறிய பார்வதி பல தலங்களுக்கும் சென்று வழிபட்டு கடைசியில் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு அழகிய உருவம் பெற்றாள். "சவுந்தர்ய நாயகி' என இவளை அழைத்தனர். தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அன்னையிடம் அதற்கான அருளாசி பெறலாம். பார்வதியை பசுவாக சபித்த சிவன் வருத்தமடைந்து இங்கு வந்து வேதியர்களுக்கு வேதம் சொல்லித் தந்தார். எனவே இங்குள்ள இறைவனின் திருநாமம் "வேதபுரீஸ்வரர்' என்பதாகும்.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
மாசி 23,24,25 தேதிகளில் மாலை 5.55 முதல் 6.05 வரை சூரிய பூஜை நடக்கிறது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும். இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|