இங்கு சீதளா பரமேஸ்வரி, காத்தவராயன், பேச்சியம்மாள், கருப்பன் ஆகியோர் தனிச் சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
பிரார்த்தனை
தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ, பிரிந்தவர்கள் ஒன்று சேர, குடும்பம் செழிக்க, வம்சம் தழைக்க இந்த அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்குப் புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வேண்டிக் கொள்கின்றனர். தவிர அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து விளக்கேற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஆடிப்பெருக்கு நாளில், கோயிலுக்கு அருகில் உள்ள மகிமலையாற்றில் தீர்த்தவாளி வைபவம் நடைபெறும். உற்சவரான சீதளா பரமேஸ்வரி, காத்தவராயன், பேச்சியம்மன், கருப்பன் ஆகியோர் தனிச்சன்னதிகளில் காட்சி தருகின்றனர். கோயிலின் தீர்த்தக் குளத்தில், சர்க்கரை மற்றும் உப்பு கரைத்துப் பிரார்த்தித்தால், உடலில் உள்ள கட்டி போன்றவையும் மனக் கஷ்டங்களும் விரைவில் கரைந்து காணாமல் போகும்! கோயிலின் வேப்பமரத்தில் மஞ்சள் சரடு கட்டி வழிபட்டால் கல்யாண வரம் கைகூடும்; தொட்டில் கட்டி பிரார்த்தித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தல வரலாறு:
மாரியம்மன் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவளாம்! பசு பால் சொரிந்து, பூமியில் அம்மன் இருப்பது தெரிந்ததால், ஊருக்கு ஒழுகைமங்கலம் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள மூலவர் சுயம்புவாக அருள்பாலிப்பது சிறப்பு.