Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திரவுபதியம்மன்
  உற்சவர்: திரவுபதியம்மன், விநாயகர், முருகன்
  அம்மன்/தாயார்: திரவுபதியம்மன்
  தல விருட்சம்: மகிழம் மரம்
  தீர்த்தம்: சிவகுளத்து தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: நக்கீரர் இந்த கிராமத்தின் வழியாக வந்து சென் றதாவும், சில தினங்கள் கோவில் உள்ள இடத்தில் தங்கியதாலும், நக்கீரர் வந்த குடி என்பதே பிற்காலத்தில் நக்கரவந்தன் குடி என மருவியுள்ளது.
  ஊர்: நக்கரவந்தன்குடி
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி மாதம் திருவிளக்கு பூஜை, புரட்டாசி மாதம் அம்மன் படியிறங்குதல், ஆனி மாதம் தீ மிதி திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு திரவுபதியம்மன் திருக்கோயில், நக்கரவந்தன்குடி மற்றும் அஞ்சல், சிதம்பரம் வட்டம், கடலூர்-608102.  
   
    
 பொது தகவல்:
     
  கிழக்குப் பக்கம் வாயில்,  தலவிருட்சம் மகிழம் மரம் கோயில் இடபக்கம் உள்ளது. கொடிமரம் 12 அடி உயரத்திலும், அ ருகில் ஐந்தடி உயரத்தில் பலி பீடமும் உள்ளது. மகா மண்டபத்தில் 200 பேர் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்யலாம். விமானம் தரை மட்டத்தில் இருந்து 30 அடி உயரத்தில் 3 கலங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஈசான மூலையில் 200 கிலோ எடையில் ஆலய பித்தளை மணியும், சற்று உள்ளே சென்றால் இடபக்கம் விநாயகர், நக்கீரரும் வலப்பக்கம் முருகன் மற்றும் ஐயப்பனும் அருள்பாலிக்கின்றனர்.

கருவறையில் ஐந்தே கால் அடி உயரத்தில் திரவுபதியம்மன் (கருங்கல் விக்ரகம்) நின்ற நிலையில் வலதுகையில் கிளி, இடது கையை கீழே தொ ங்க வைத்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் உற்சவமூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். வெளி பிரகாரத்தில் இடபக்கம் தெற்கு பக்கம் பார்த்து சரஸ்வதியும், மேற்கு பக்கம் அன்னபூரணியும், வலது பக்கத்தில் தெற்கு பக்கம் பார்த்த வகையில் தனி சன்னிதியிலும், நவக்கிரங்களும் உள்ளது. நுழைவு வாயில் வலது பக்கத்தில் மேற்குமுகம் பார்த்த கோணத்தில் ஆஞ்சநேயரும், காலபைரவரும் தனி, தனி சன்னிதியில் ஒரு சிறு கலசம் அமைக்கப்பட்ட சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  தீராத நோய், திருமணத்தடை, புத்திரபாக்கியம் மற்றும் விவசாய அபிவிருத்திக்காக பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  நெய் தீபம், திருவிழா காலத்தில் அங்கபிரதட்சணம், மாவிளக்கு ஏற்றுதல், தீமித்தல், எடுப்பு சுவாமிகள் பக்தர்கள் காணிக்கையாக வைத்துள்ளனர். 
    
 தலபெருமை:
     
  சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமி, மேற்கே வள்ளலார் பிறந்த மருதுõர் உள்ளதுடன், சிதம்பரம் நடராஜர் தரிசனத்திற்கு நக்கரவந்தன்குடி கட்டளை உபயம் செய்வது கோயிலுக்கு பெருமையாக கருதுகின்றனர்.  
     
  தல வரலாறு:
     
  வன்னியர்கள் தங்கள் குடியின் காவல் தெய்வமாக வணங்குவதல் வன்னியர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் திரவுபதியம்மன் கோயில் அதிகளவில் உள்ளதாகவும் அந்த வகையில் இப்பகுதியில் கோயில் அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் வசித்த நிலக்கிழார் சந்திரசேகர் என்பவரின் தாத்தா ஏகாதசி விழா நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். அப்போது ஒரு பெண் தலைவிரி கோலமாக வந்து உணவு கேட்டார். அதற்கு அவர் மற்றவர்களை போல் அந்த பெண்ணை தரையில் அமர்ந்து உணவு உண்ண வைத்துள்ளார். அதன் பின் அந்த பெண் பிரசன்னமாகி தான் திரவுபதியம்மன் என்பதை உணர்த்தி காட்சியளித்து தான் வேண்டியதை தருவதாக கூறி மறைந்துள்ளார். அதன் பின் அவர் அப்பகுதியினர் உதவியுடன் சிறு கோயில் கட்டி வழிபாடு நடத்தியுள்ளார். அவருக்குப் பின் அவரது உறவினர்கள் மற்றும் வழித் தோன்றல்கள் வழிபாடு நடத்தி வந்தனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருவிழாவின் போது ஒரே குடும்பத்தில் இருவர் இறந்தனர். அதன் பின் கோயிலில் எந்த விழாவும் நடக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் கோயில் கட்டி புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தி தற்போது சந்திரசேகர் வம்சத்தை சேர்ந்த குலசேகர் தலைமையில் பராமரிப்பு நடந்து வருகிறது.  
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar