பொதுவாக வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் பெருமாள் வைத்திருப்பார். ஆனால் இத்தலத்தில் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் வைத்த கோலத்தில் அருள் பாலிப்பது மிகவும் சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல்10.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்,
மணிமங்கலம் - 601 301.
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 98413 63991.
பொது தகவல்:
மூலஸ்தானத்தில் நான்கு கைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜகோபாலர் நின்ற கோலத்தில் பத்ம விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இடது கையில் தண்டாயுதம் இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி இருக்கிறாள். இவருக்கான உற்சவர், வலது கையில் சக்கரம், இடக்கையில் சங்கு வைத்திருக்கிறார்.சுவாமி சன்னதியின் நுழைவு வாயிலின் மேலே, பள்ளி கொண்ட கோலத்தில் கிருஷ்ணரின் சிற்பம் இருக்கிறது. கிருஷ்ணருக்கான தலம் என்பதால், இவ்வாறு வடித்துள்ளனர்.தாயார் செங்கமலவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். ஆண்டாளுக்கும் சன்னதி உண்டு. ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் தலம், இவ்வூருக்கு அருகில் இருக்கிறது. ராமானுஜர், இங்கு வந்து ராஜகோபாலரை தரிசித்துச் சென்றுள்ளதாகச் சொல்கிறார்கள். பெருமாள் சன்னதி சுற்று சுவரில் தெட்சிணாமூர்த்தி, நர்த்தன கிருஷ்ணர், நரசிம்மர், காளிங்கநர்த்தன கிருஷ்ணர் ஆகியோரின் சிற்பங்களும் வடிக்கப்பட்டிருக்கிறது.
பிரார்த்தனை
கண்நோய் நீங்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், சுவாமிக்கு வஸ்திரம், துளசி மாலை அணிவித்து, விசேஷ திருமஞ்சனம் செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
தலபெருமை:
சிவன் சன்னதிகளில்தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோயிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருக்கிறார். மேலும் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள்களையும் தரிசிக் கலாம்.வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.கால்நடைகள் நோயின்றி வாழவும், பசுக்கள் நன்கு பால் சுரக்கவும், ராஜகோபாலருக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது.
காவியுடை ஆஞ்சநேயர்: ராஜகோபாலர் கோயிலுக்கு எதிரே சற்று தூரத்தில் ஆஞ்சநேயர், தனிக்கோயிலில் இருக்கிறார். இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருக்கும் இவர், கையில் கதாயுதம் இல்லாமல், "அஞ்சலி வரத ஆஞ்சநேயராக' காட்சி தருகிறார்.ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி தெய்வம் என்பதால், இவருக்கு காவியுடையை பிரதானமாக அணிவித்து அலங்காரம் செய்யப்படுவதுசிறப்பு. ஆஞ்ச நேயரின் மார்பில் ராமபிரான், எப்போதும் வாசம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்கும் விதமாக கைகளை மார்பில் குவித்து, இரு கட்டை விரல்களையும் மார்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள மன தைரியம் உண்டாகும், குரு மீதான மரியாதை அதிகரிக்கும்.இவர் தவிர, கோயில் முன்மண்டபத்தில் ஒரு கல்லில் புடைப்புச் சிற்பமாக, ஆஞ்சநேயர் கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.
தல வரலாறு:
கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு, குருக்ஷேத்ர போரின்போது, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தார்.போரில் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டிருந்த அவர், போர் அறிவிப்பிற்காக, சங்கு மட்டும் வைத்துக்கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் குருக்ஷேத்ர போரின்போது, வலது கையில் சங்கு வைத்து ஊதியதன் அடிப்படையில் இங்கு மகாவிஷ்ணு, வலது கையில் சங்கு வைத்தபடி காட்சி தருகிறார்.வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இடது கையில் இருக்கிறது. கிருஷ்ணாவதாரத்தில் இடையனாக இருந்து, பசுக்களை மேய்த்ததால் இவர், "ராஜகோபாலர்' என்று பெயர் பெற்றார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பொதுவாக வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் பெருமாள் வைத்திருப்பார். ஆனால் இத்தலத்தில் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் வைத்த கோலத்தில் அருள் பாலிப்பது மிகவும் சிறப்பாகும்.
இருப்பிடம் : சென்னை தாம்பரத்தில் இருந்து 9 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் 55 என், 55 எஸ், எம் 52 எச், எம் 80 ஆகிய வழித்தட எண் பஸ்கள் இவ்வூர் வழியே செல்கிறது. போலீஸ் ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
தாம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம் :
மீனம்பாக்கம்
தங்கும் வசதி : சென்னை
தாஜ் கோரமண்டல் +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் +91-44-2811 0101 தி பார்க் +91-44-4214 4000 கன்னிமாரா +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ +91-44-4225 2525 அசோகா +91-44-2855 3413 குரு +91-44-2855 4060 காஞ்சி +91-44-2827 1100 ஷெரிமனி +91-44-2860 4401 அபிராமி +91-44-2819 4547 கிங்ஸ் +91-44-2819 1471