மிகவும் பழமைவாய்ந்த இக்கோயிலில் மாசி சிவராத்திரி பொங்கல் விழா வெகு விமர்சையாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியன்று பொங்கல் வைத்து விடிய விடிய திருவிழா நடக்கும்.மறுநாள் கொடியேற்றம் முடிந்து மாலையில் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்சியும் இரவு ஐந்துமுக கப்பரை எடுத்துச் சென்று அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடக்கும். கரகம் எடுத்தல், சக்கி நிறுத்துதல், அலகு குத்துதல் விழா நடக்கும். மறுநாள் பூங்கப்பரை விழாவும், அபிஷேகும், இருளப்ப சுவாமிக்கு சிறப்பு செய்யப்படும். தொடர்ந்து பாரி வேட்டை மடிந்து குதிரை வானகத்தில் அம்மன் வீதி உலா நடக்கும். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், சோணையா சுவாமிக்கு அடக்க பூஜை நடக்கும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
தல சிறப்பு:
பெரும்பாலான குடும்பங்களுக்கு இக்கோயில் குலதெய்வ கோயிலாக விளங்குவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோயில்.
சின்னக்கடை வீதி, உசிலம்பட்டி ரோடு
திருமங்கலம் 625706 மதுரை மாவட்டம்.
போன்:
+91 96296 89984
பொது தகவல்:
காலை 8 மணிமுதல் 8.30 மணிவரையும், மாலை 4.30 முதல் 5 மணிவரை நித்தியபடி பூஜைகள் நடக்கும்.
பிரார்த்தனை
பக்தர்கள் வேண்டிய வரம் அளிக்கும் கோயிலாக திகழ்வது சிறப்பாகும்.
நேர்த்திக்கடன்:
குருநாதசுவாமிக்கும், அங்காள ஈஸ்வரிக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
குருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய இக் கோயிலில் கருவறையில் மூலவர் குருநாத சுவாமி எழுந்தருளியுள்ளார். அருகில் சுவாமியின் இடதுபுறம் அங்காள ஈஸ்வரி, வலது கரத்தில் கத்தி, இடது கரத்தில் குங்கும சிமிழுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார். மூலவர்கள் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.
கருவறையின் முன் மண்டபத்தில் இடது புறம் விநாயகர், வலதுபுறம் முருகப் பெருமான், மையத்தில் உற்சவர் ஐம்பொன்னால் ஆன ஸ்ரீஅங்காள ஈஸ்வரி எழுந்தருளியுள்ளனர். கோயிலுக்குள் நுழைந்தவுடன் இடது புறம் பேச்சி அம்மன், ராக்காயி அம்மன், சங்கிலி ஆண்டவர், கால பைரவர், சந்திவீர சவாமி, சன்னாசி சுவாமி, லாட சுவாமி ஆகியோர் தெற்கு நோக்கியும், வீரபத்திர சுவாமி கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மூலவர் முன்பு நந்தி மண்டபம், சுற்று பிரகாரத்தில் நாகர் சன்னதி உள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பெரும்பாலான குடும்பங்களுக்கு இக்கோயில் குலதெய்வ கோயிலாக விளங்குவது சிறப்பு.
இருப்பிடம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து உசிலம்பட்டி செல்லும் ரோட்டில் சின்ன கடை வீதியில் கோயில் அமைந்துள்ளது. திருமங்கலத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரம்.