|
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) |
|
அம்மன்/தாயார் | : |
திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) |
|
தீர்த்தம் | : |
சந்திர புஷ்கரிணி |
|
ஊர் | : |
திருமணிக்கூடம் (திருநாங்கூர்) |
|
மாவட்டம் | : |
நாகப்பட்டினம்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
| பாடியவர்கள்: | |
|
|
|
|
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றதுமாய எந்தை ஒண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங்கண்ட திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே.
-திருமங்கையாழ்வார்
|
|
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
வைகுண்ட ஏகாதசி |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 38 வது திவ்ய தேசம். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில்,
திருமணிக்கூடம்- 609 106, திருநாங்கூர்,
நாகப்பட்டினம் மாவட்டம்.
|
|
| | |
|
போன்: | | | | | |
+91 96554 65756 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இத்தல இறைவன் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கனக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை கருடாழ்வார், சந்திரன் ஆகியோர் தரிசித்துள்ளனர். |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,""உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்,'என சாபமிட்டான்.
சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான்.
சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாக சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான்.
அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாக காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாபவிமோசனம் கிடைத்தது. |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|