|
அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
சுவர்ணபுரீஸ்வரர் |
|
உற்சவர் | : |
சோமாஸ்கந்தர் |
|
அம்மன்/தாயார் | : |
சுகந்த குந்தளாம்பிகை |
|
தல விருட்சம் | : |
வன்னி, வில்வம் |
|
தீர்த்தம் | : |
சூரிய தீர்த்தம், காவேரி |
|
ஆகமம்/பூஜை | : |
காரண ஆகமவதிப்படி பூஜை |
|
புராண பெயர் | : |
இலக்குமிபுரி,கந்தபுரி, இந்திரபுரி |
|
ஊர் | : |
செம்பொனார்கோவில் |
|
மாவட்டம் | : |
நாகப்பட்டினம்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறார். தனது அகந்தையால் தனது யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறார்.
தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்று வித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார்.தாட்சாயிணியும், சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவனும் தாட்சாயிணியை மன்னித்து சுகந்த குந்தளாம்பிகை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
சித்திரை மாதம் 7ம் நாள் முதல் 18 நாள் வரை 12 நாட்கள் காலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது மிகவும் விசேஷம்.
இங்குள்ள சிவலிங்கம் பதினாறு இதழ்களுடைய தாமரை இதழ் போன்ற ஆவுடைகளில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|