Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வான்முட்டி பெருமாள்
  உற்சவர்: யோகநரசிம்மர்
  அம்மன்/தாயார்: மகாலட்சுமி
  தீர்த்தம்: பிப்பல மகரிஷி தீர்த்தம்
  ஊர்: மயிலாடுதுறை
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி  
     
 தல சிறப்பு:
     
  இங்கு பெருமாள் அத்திமரத்தால் ஆனவர். இங்கு ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில், கோழிகுத்தி, மயிலாடுதுறை- 609001. நாகப்பட்டினம் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4364223395, 9842423395, 9787213226 
    
 பொது தகவல்:
     
  கருடாழ்வார், ராமானுஜர், விஸ்வக்ஷேனர் ஆகியோரும் இங்கு அருள் பாலிக்கிறார்கள். இத்தலத்தின் அருகிலுள்ள மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயிலில் பிப்பலருக்கு சிலை உள்ளது.

ராஜகோபுரத்தின்கீழ் துவாரபாலகர்கள் ஜெயன், விஜயன், பலிபீடம், கொடிமரம், விநாயகர், கருடாழ்வார் உள்மண்டபத்தில் மூலவருக்கு வலப்புறம் சக்கரத்தாழ்வாரும், இடப்புறம் யோகநரசிம்மரும் கிழக்கு நோக்கியவாறும்; நர்த்தன கிருஷ்ணர் தெற்கு நோக்கியவாறும் அருள் புரிகின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்யலாம் 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  திருப்பதி சீனிவாசப்பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாக தரிசித்த பலன், கோழிகுத்தி வான்முட்டி பெருமாளை தரிசித்தால் கிடைக்கும்.  800 ஆண்டுகள் பழமையான வான்முட்டி பெருமாள் கோயில் உள்ளது.வேருடன்கூடிய ஒரு அத்தி மரத்தில் 15 அடி உயரத்திற்கு சீனிவாச பெருமாள் விசுவரூப தரிசனம் தருவது காணக் கிடைத்தற்கரிய ஒரு காட்சி.

பிற்காலத்தில் இத்தலத்தின் பெருமைகளை கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மகாராஜா பெருமாளிடம்,""பகவானே! எனக்கும் யுத்த தோஷம் உள்ளது. அதை நீக்கி அருள்புரிய வேண்டும்,''என வேண்டிக் கொண்டார். அவருக்கும் பெருமாள் இந்த அத்தி மரத்தில் அருள்பாலித்தார். இதனால் மகிழ்ந்த மன்னர் தன்னைப் போல அனைவரும் பலனடைய அத்திமரத்தில் 15 அடி உயரத்தில் சிலை வடித்து பூஜை செய்தார்

மார்பில் மகாலட்சுமி: சீனிவாசப் பெருமாள் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி யுடன் அருள்பாலிக்கிறார். இவர் மிகப்பிரமாண்டமாக விஸ்வரூபத்தில் அமைந்திருந்ததால் "வான்முட்டி பெருமாள்' என அழைக்கின்றனர். இவர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால், அபிஷேம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. உற்சவமூர்த்தியாக உள்ள யோக நரசிம்மருக்கே அபிஷேகம்.

சப்தஸ்வர ஆஞ்சநேயர்: வான்முட்டி பெருமாளின் மார்பில் இருக்கும் மகாலட்சுமி, அவரது அருகில் சிலைவடிவிலும் அருள் செய்கிறாள். ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது. இதன் காரணமாக இந்த பெயர் ஏற்பட்டது. மேலும் ஆஞ்சநேயரின் வாலில் கட்டப்பட்டுள்ள மணியை தலைமீது தூக்கி வைத்துள்ளார்.

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்து இன்னல்கள் நீங்கியதாக கல்வெட்டு உள்ளது.  பிப்பல மகிரிஷி பாடிய ஸ்லோகம் இக்கோயில் வழிபாட்டு நேரங்களில் சொல்லப்படுகிறது. பலருக்கும் பலவிதமான பலன்களை அள்ளித்தந்த பெருமாள் கோயில்.

சரபோஜி மன்னர் கண்ட காட்சி: கோழிகுத்தி வான  முட்டி பெருமாளின் சிறப்பைக் கேள்விப்பட்ட சரபோஜி மகாராஜா, இங்குவந்து மனதார வழிபட்டார். பகவானே! எனக்கு யுத்ததோஷம் உள்ளது. அதை நீக்கி அருள்புரிய வேண்டும் என வேண்டிக்கொண்டார். பிப்பிலர்க்கு அருளியதுபோல் (வானளாவிய காட்சி) சரபோஜி மகாராஜாவுக்கும் இந்த அத்திமரத்தில் காட்சி தந்தருளினார். ஆஹா! கனவிலும் நினைவிலும் காணக்கிடைக்காத காட்சியொன்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய மன்னர், தன்னைப் போல அனைவரும் பலனடைய வேண்டும் என்று எண்ணினார். சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் கொண்டு சதுர்புஜனாய் தனக்கு பெருமாள் காட்சி தந்த அற்புத திருக்கோலத்தை ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சிலைவடித்து, கோயில் எழுப்பி பூஜை செய்தார். விஸ்வரூப பெருமாள் என்பதால் வானமுட்டி பெருமாள் என்ற திருநாமம் கொண்டார்.

மகேந்திரவர்மன் உள்ளிட்ட பிற மன்னர்களும் திருப்பணி செய்துள்ளார்கள் என்பதற்கு 7-ஆம் நூற்றாண்டு, 10-ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் உள்ளன. அந்தக் கல்வெட்டில் பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. இவ்வளவு பழமைவாய்ந்த கோயில் 2004-ஆம் ஆண்டு நிலவரப்படி சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. அதன் பின் சேவார்த்திகள், ஊர்மக்கள், ஆன்மிக அன்பர்கள் ஒத்துழைப்புடன் மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டு, வைணவ ஆகம விதிப்படி சுற்றுப்பெருமதில்களுடன் கோயில் அமைத்து, பெருமாளின் உத்தரவுப்படி 11-7-2007 ஆம் வருடம் குடமுழுக்கு விழா கண்டு, அன்று முதல் இன்றுவரை முறைப்படி காலபூஜைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின்கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கி வருகிறது. இனி கோயில் அமைப்பையும் சிறப்பையும் பார்ப்போம்.
 
     
  தல வரலாறு:
     
  முன்னொரு காலத்தில் குடகுமலைச்சாரலில் நிர்மலன் என்ற அரசன் வாழ்ந்தான். அவன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டான். ஒருமுறை, அவன் காட்டு வழியாக வந்து கொண்டிருந்த போது, முனிவர் ஒருவர் வீணை மீட்டி மிகவும் இனிமையாக பாடிக்கொண்டிருந்தார். அவரிடம் மன்னன் தன் நோய் பற்றி வருந்தி முறை யிட்டான். இதனைக்கேட்ட முனிவர் மன்னனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் செய்து, அதை தினமும் ஜெபிக்கும்படி கூறினார்.முனிவர் கூறியபடி மன்னனும் அந்த மந்திரத்தை உருகி ஜெபிக்க தொடங்கினான். அப்போது அசரீரி ஒலித்தது.""நான் பெருமாளின் குரலாய் ஒலிக்கிறேன். உனக்கு ஒரு கடுமையான தோஷம் உள்ளது. இந்த தோஷம் நீங்க காவிரிக்கரை வழியாக உன் யாத்திரையை தொடங்கு. மூவலூரில் உள்ள மார்க்க சகாயேஸ்வரர் (சிவன்) உனக்கு வழிகாட்டியாக வருவார். வழியில் உள்ள திருத்தலங்களில் எல்லாம் நீராடு. எங்கு உன்மேனி பொன் வண்ணமாக மாறுகிறதோ, அங்கேயே தங்கிவிடு,''என்றது. அதன்படி, மன்னன் காவிரிக்கரை வழியாக தன் பயணத்தை துவக்கினான்.ஓரிடத்தில் அவனது மேனி பொன்நிறமாக மாறியது. மகிழ்ச்சியடைந்த மன்னன் பெருமாளுக்கு நன்றி கூறி மனமுருகி வழிபட்டான். அந்த இடத்தில் ஒரு பெரிய அத்திமரம் தோன்றியது. அந்த மரத்தில் நாராயணன், சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் மன்னனுக்கு காட்சி கொடுத்தார்.மன்னனின் பாவங்கள் இங்கு உடனடியாக நீங்கியதால் இத்தலம் "கோடிஹத்தி' என அழைக்கப்பட்டது. "கோடிஹத்தி' என்றால் "சகல பாவமும்நீங்குமிடம்' என்று பொருள். இதுவே, காலப்போக்கில் மருவி "கோழிகுத்தி' ஆனது.  இதன் பின் மன்னன் பெருமாள்  பக்தனாகி தவமிருந்து ரிஷியாகவே மாறி விட்டான். "பிப்பல மகரிஷி' என மன்னனை மக்கள் அழைத்தனர். பிப்பலர் காவிரிக்கரையில் தவம் புரிய ஆரம்பித்தார். அவர் தவம் செய்த இடத்தில் தற்போது ஒரு மண்டபம் உள்ளது. இதன் அருகில் ஓடும் காவிரி தீர்த்தத்தை "பிப்பல மகரிஷி தீர்த்தம்' என அழைக்கிறார்கள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பெருமாள் அத்திமரத்தால் ஆனவர்.
விஞ்ஞானம் அடிப்படையில்: இங்கு ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கின்றனர். இந்த சிலையில் 7 இடங்களில் தட்டினால் ஓசை எழுகின்றது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar