Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பேச்சியம்மன்
  தல விருட்சம்: ஆலமரம்
  ஊர்: மதுரை
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி, மகாசிவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு பேச்சியம்மன் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 தினமும் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல் மதுரை- 625001. மதுரை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 93441 18680 
    
 பொது தகவல்:
     
  நாடெங்கும் நவராத்திரி விழா நடைபெறுகிறது. நவராத்திரி காலத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதியை வழிபட்டால் நமக்கு வீரம், செல்வம், கல்வி ஆகியன கிடைக்கும். சரஸ்வதி கல்விக்கு அதிபதி. அதேபோல் பேச்சுக்கு அதிபதி தான் பேச்சியம்மன்.

இக்கோயிலில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகம் சிறப்பாக நடத்தப்படுகிறது. அத்துடன் மாலையில் குங்குமத்தால் சிறப்பாக அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரத்தை பார்ப்பதற்காகவே பக்தர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள்.
 
     
 
பிரார்த்தனை
    
  பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் பேச்சு குறைபாடு நீங்கும். அத்துடன் பேச்சுத்திறமை வேண்டுபவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டால் சிறந்த பேச்சாற்றல் கிடைக்கும் என் பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இத்தலத்திற்கு சென்றால் விநாயகர், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவகிரகம், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை, பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர் ஆகியோரை ஒரே இடத்தில் தரிசித்து வரலாம்.
 
     
  தல வரலாறு:
     
  மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் பேச்சு குறைபாடு நீங்கும். அத்துடன் பேச்சுத்திறமை வேண்டுபவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டால் சிறந்த பேச்சாற்றல் கிடைக்கும் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

கோயிலின் தல விருட்சம் ஆலமரம். ஆலமரத்துடன் வேம்பும் இணைந்து போட்டி போட்டு வளர்கிறது. அம்மனின் வலது புறம் ஓங்கிய கையுடனும். இடது கையில் குழந்தையுடனும் காலில் அரக்கனை மிதித்து இருப்பது கண்கொள்ளா காட்சியாகும். ஆறடி உயரமுள்ள இந்த அம்மனை தரிசிக்கும் போது நமக்கு அது விக்ரகம் போல் தோன்றாது. ஒரு பெண் நேரில் நிற்பது போலவே தோன்றும்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பேச்சியம்மன் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar