Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: யோக நரசிம்மர்
  அம்மன்/தாயார்: நரசிங்கவல்லி தாயார்
  தீர்த்தம்: சக்கர தீர்த்தம்
  ஊர்: யானைமலை ஒத்தக்கடை
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  கோயிலை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தத்தில் மாசிப்பவுர்ணமியில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை போலவே இங்கும் பவுர்ணமி கிரிவலம் சிறப்பு. சிவன் கோயில்களைப்போலவே இங்கும் பிரதோஷ வழிபாடு உண்டு. எனவே நரசிம்ம பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பு.  
     
 தல சிறப்பு:
     
  இரு ஒரு குடவறைக்கோயில். நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயில்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், யானைமலை ஒத்தக்கடை - மதுரை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 - 98420 24866 
    
 பொது தகவல்:
     
  மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோயிலில் கொடி மரம் கிடையாது. ஏனெனில் கொடிமரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீள அகல அளவைப்பொறுத்தே அமையும். இத் தலத்தில் கருவறைக்குமேல் யானைமலை மிகவும் உயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கவில்லை என கூறப்படுகிறது.

இரு ஒரு குடவறைக்கோயில். கருவறையும், அதன் முன்னே உள்ள உடையவர், நம்மாழ்வார் உள்ள அர்த்த மண்டபமும் குடவறை அமைப்புகள் தான்.
 
     
 
பிரார்த்தனை
    
 

நரசிம்மர் அவதாரம் எடுத்தது தேய்பிறை சதுர்த்தி பிரதோஷ கலாத்தில் தான். எனவே, அந்த நேரத்தில் இந்த யோகநரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரிபயம் இருக்காது. மரணபயம் நீங்கும்.


தாயார் நரசிங்கவல்லியை இந்நேரத்தில் வேண்டினால் திருமணத் தடை நீங்கும். கோபக்கார கணவன் இங்கு வழிபட்டால், மனைவியை நெஞ்சில் தாங்கும் சாந்த சொரூபியாகிவிடுவார் என்பதெல்லாம் நம்பிக்கை.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  நீங்கள் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை செய்திருப்பீர்கள் ஆனால், விஷ்ணு கோயிலான இங்கும் மிகச்சிறப்பாக பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.  
     
  தல வரலாறு:
     
  ரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி இங்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். உக்கிர கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வர வேண்டுமென பிரகலாதனிடம் கேட்டுக் கொண்டனர். பிரகலாதனும் இத்தலத்துக்கு வந்தான். அப்போது. நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் விஷயத்தை கூறினர் தேவர்கள். உலகைக் காக்கும் அந்தத் தாயார் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. அத்துடன் அவளை ஆலிங்கனம் செய்து யோகநரசிம்மராக கேட்டதையெல்லாம் தருபவராக அருள்பாலித்து வருகிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இரு ஒரு குடவறைக்கோயில். நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயில்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar