Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பிரசன்ன வெங்கடாசலபதி
  உற்சவர்: ஸ்ரீ நிவாசன்
  அம்மன்/தாயார்: பூ‌தேவி, ஸ்ரீ தேவி
  தீர்த்தம்: கிணற்று நீர்
  ஊர்: தல்லாகுளம்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தமிழ் புத்தாண்டு, ஆனிப்பூரம், புரட்டாசி பிரமோத்சவம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், ராப்பத்து உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு ஆஞ்சநேயர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். திருவிழா காலங்களில் அதிகாலையிலேயும் நடை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், தல்லாகுளம் - 625 002, மதுரை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 452 2530329 
    
 பொது தகவல்:
     
 

மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் சிற்பக்கலைக்கு நற்சான்று தருபவையாக அமைந்துள்ளன. இங்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்யமாக வழங்கப்படுகிறது.


 
     
 
பிரார்த்தனை
    
 

இத்தலத்தில் வீற்றிருக்கும் பிரசன்ன வெங்கடாஜலபதியை வேண்டிட, படிப்புத் தடை விலகும், திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு, வேலை கிட்டும். இங்குள்ள கோமாதாவிற்கு அகத்திக் கீரை வழங்கிட எண்ணிய காரியங்கள் நிறைவேறிடும்.  ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வர, வழக்குகளில் வெற்றி கிட்டும். வியாதிகள் தீரும் என நம்பப்படுகிறது.


 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டிய காரியங்கள் நிறைவேறிட, பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு புஷ்ப அங்கிகள் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகங்களும், நைவேத்யங்களும் படைக்கப்படுகின்றன. ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை மாலைகள் சாத்தப்படுகின்றன. விவசாயம், வியாபாரத்தில் மேன்மை கண்டவர்கள் நெல், சோளம், கம்பு, கடலை, மிளகாய் உள்ளிட்ட தானியங்களையும் நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இத்தலம் திருமலைநாயக்கர் மகாலுக்கு நேரே அங்கிருந்தே இறைவனை தொழும்படியாக கட்டப்பட் டுள்ளது. இத்தலத்தில், ஸ்ரீ வெங்கடாஜலபதியின் கருவறைக்கு வலப்புறத்தில் நின்ற நிலையில் உக்கிரமாக ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். அவரின் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாக எதிரே ஒரே கல்லில் சங்கு மற்றும் சக்கரங்கள் மட்டு‌ம் செதுக்கப்பட்ட வடிவில் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார்.


இத்தலத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி, திருமலை நாயக்கர் மன்னருக்கு பிரசன் னமாக காட்சியளித்ததால், பிரசன்ன வெங்கடாஜலபதி என அழைக்கப்படுகிறார். திருப் பதிக்கு சென்று வெங்கடா ஜலபதியை வழிபட முடியாதோர் இத்தலத்திற்கு வந்து பிரசன்ன வெங்கடாஜலபதியை வேண்டிட, பலன்கள் கிட்டும்.சித்ரா பவுர்ணமி திருவிழாவின்‌ போது, தங்க குதிரையில் பவனி வரும் அழகர்,இக்கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் மாலை சாத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பின்பே ஆற்றில் இறஙகச் செல்வார். தினமும் அதிகாலையில் விஸ்வரூப தரிசன பூஜை ( கோமாதா பூஜை) நடைபெறுகிறது.


 
     
  தல வரலாறு:
     
 

மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர், திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தராக இருந்தார். அவர் வெங்கடாஜலபதி கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் ‌போது, தமது மாகலில் இருந்தே அவரை பூஜித்து விட்டு பின்பு உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதற்காக, திருப்பதியில் பூஜை செய்யும் போது தாமும் தரிசனம் செய்ய வசதியாக கோயிலில் இருந்து அவரது மகால் அமைந்திருந்த பகுதி வரையிலும் வழி நெருகில் மணிகட்டி மண்டபங்களை அமைத்தார்.


கோயிலில் பூஜை ‌தொடங்கிய உடன் அவரது பணியாளர்கள் முதல் மணியை அடிக்க, தொடர்ந்து ஒவ்வொரு மணியாக அடிக்கப்படும். இறுதியில் மகால் அருகேயுள்ள மணி ஒலித்த பின் இங்கிருந்‌தே வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து விட்டு, உணவினை உண்பார். இந்நிலையில் ஒர் நாள் மணி ஒலிக்காது போக, கோபமடைந்த மன்னர் என்‌ன பிரச்னை என அறிவதற்காக தனது குதிரையில் மணிகட்டி மண்டபம் நோக்கிச் சென்றார்.முன்பு மாதுளை தோட்டமாக இருந்த பகுதி அரு‌‌கே அவர் வந்த போது அவரது குதிரை அவ்விடத்தை விட்டு நகராமல், அங்கேயே மிரட்சி உடன் கணைத்தபடி நின்றது. அப்போது கீழே இறங்கிய மன்னர் அங்கே சுயம்புவாக வீற்றிருந்த ஆஞ்சநேயர் சிலையினைக் கண்டு மனம் வியந்தார்.அப்போது அவரது மனதில் பிரசன்னமாக காட்சியளித்த ஸ்ரீவெங்கடாஜலபதி தினமும் தன்னை தரிசனம் செய் அத்தலத்திலேயே கோயில் ஒன்றினைக் கட்டும் படி அறிவுறுத்தினார். அதன் பி‌ன்பே திருமலைநாயக்கர் மன்னர், இவ்விடத்தில் இக்கோயிலைக் கட்டியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஆஞ்சநேயர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar