ஒவ்வொரு ஆண்டும் பங்குனி முதல் தேதி முதல் பத்தாம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.
தல சிறப்பு:
மண்டைக்காடு பகவதி அம்மன் தலத்தை "பெண்களின் சபரிமலை' என்பார்கள்.
அதே போல் இங்கு முழுவதுமே பெண்கள் வழிபாடு தான் இருந்தாலும் ஆண்களும் வழிபடலாம்.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த நாகம்மனை தரிசிக்க செல்லலாம்.
முகவரி:
அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில்,
கெங்கமுத்தூர், பாலமேடு,
மதுரை மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
இத்தலத்தின் வடக்கே சிறு மலையில் தாடகை நாச்சியம்மன் கோயிலும், தெற்கே கல்லுமலை அருகே முருகப்பெருமான் கோயிலும் அமைந்துள்ளன.
சாத்தியார் அணையின் அருகே இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் நாகம்மாள் கோயில் கொண்டுள்ளாள்.
பிரார்த்தனை
நாகதோஷம், செவ்வாய் தோஷம், மூலநட்சத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு தங்கள் தோஷங்களை போக்கி கொள்கின்றனர்.
முழுவதுமே சேவை அடிப்படையில் செய்யப்படும் இத்தலக்கோயிலுக்கு, குழந்தை பாக்கியம் வேண்டியும், தீராத நோயை தீர்க்கும் படியும் இங்கு வந்து நாகம்மாளை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு பால் அபிஷேகம்செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பார்வதியின் 108 அவதாரத்தில் ஒன்று தான் இந்த நாகம்மாள் அவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத்தான், அன்னை பராசக்தி, நாகம்மாள் அவதாரம் எடுத்துள்ளாள் என்கிறது புராணம்.
ஆண்டவனின் ஆபரணம் : ஒரு முறை காசிப முனிவரின் மனைவிகளில் ஒருவரான கத்துரு என்பவள் ஆதிசேஷன் முதலிய பாம்புகளைப் பெற்றாள். வினதை என்பவள் கருடனைப்பெற்றாள். கருடனும் பாம்புவும் விரோதி போல எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இதனால் அனந்தன் போன்ற பாம்புகள் பயந்து போய் கருடனின் கால்களில் விழுந்து எங்களை உடலில் ஆபரணமாக அணிந்து கொள்ள வேண்டுமென்று பிரார்த்தித்தன. உடனே கருடனும் அதே போல் செய்து நட்பு கொண்டாடியது.
இதன் பின் பாம்புகளெல்லாம் நாக லோகம் போய் சேர்ந்தன. இந்த நாக லோகத்தில் இருந்துதான், நாகங்கள் மகாவிஷ்ணுக்கு படுக்கையாகவும், சிவனுக்கு ஆபரணமாகவும், கருமாரி அம்மனுக்கு குடையாகவும் சென்றடைந்தன.
நாகம்மாளின் அவதாரம் : இறைவன் உருவமற்றவர் என்றும், இறைவனை எந்த உருவத்திலும் வழிபடலாம் எனவும் பதஞ்சலி முனிவர் கூறியுள்ளார்.எனவே தான் பார்வதி தேவி, இந்தப் பூமியில் நல்லதை நடத்துவதற்காக "நாகம்மாள்' அவதாரம் எடுத்தார்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னை இளஞ்சோலைக் குள்ளே புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள். நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தி உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள்.
வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தை தான் தனக்குரிய இடமாக தேர்ந்தெடுத்தாள். அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று சேர்ந்து ஒங்கார சொரூபமான "நாகம்மாள்' என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மண்டைக்காடு பகவதி அம்மன் தலத்தை "பெண்களின் சபரிமலை' என்பார்கள்.
அதே போல் இங்கு முழுவதுமே பெண்கள் வழிபாடு தான் இருந்தாலும் ஆண்களும் வழிபடலாம்.