Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அறுபடைவீடு அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வீர ஆஞ்சநேயர்
  தீர்த்தம்: அழகர் கோயில் தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : பாஞ்சராத்ரம்
  ஊர்: வண்டியூர்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை‌ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விளக்கு பூஜைகளும் நடத்தப்படுகிறது.மேலும் சித்திரைத் திருவிழாவின் போது அங்க பிரதட்சண நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வைகை நதிக்கறையில் தென் திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படினும் கூட இக்கோயிலின் வாசலுக்கு முன்பாக மட்டுமே தண்ணீர் தொட்டுச் செல்லும் என்பது பெருமையாகக் குறிப்பிடத்தக்க செய்தியாகக் கூறப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அதிகாலையிலேயே நடை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், வண்டியூர், மதுரை -625 009. மதுரை மாவட்டம்.  
   
போன்:
   
  +91 452 262 3060 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்துடன் இணைந்து சிவன், விநாயகர், நாகர் மற்றும் பாண்டி முனிசாமிகளுக்கு தனிச்சன்னதிகள் உள்ளது. இங்கு நைவேத்தியமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது.  
     
 
பிரார்த்தனை
    
 

திருமணத்தடை, குழந்தைப் பேறு இல்லாமைக்கும், தீராத வயிறு வேதனைக்கும் இங்குள்ள ஆஞ்சநேயரை மனம் உறுகி வழிபட்டால் அவை விரைவில் குணமாகிறது. மேலும், உடல் பலம் கொடுக்கவும், பயம் நீங்கிடவும், நல்ல புத்தி கிடைக்கவும். நோய்கள் தீரவும் வாழ்க்கை கீர்த்தி பெறவும் இங்கு பிரார்த்தனை செய்தால் நற்பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது.



 
    
நேர்த்திக்கடன்:
    
  எண்ணிய காரியம் நிறைவேறினால், இங்குள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு தயிர் சாதத்தை நைவேத்தியமாகப் படைத்து அர்ச்சனை செய்தும், வடை மாலை, வெற்றிலை மாலை மற்றும் துளசி மாலை சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  வைகை நதிக்கறையில் தென் திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம் வைகை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படினும் கூட இக்கோயிலின் வாசலுக்கு முன்பாக மட்டுமே தண்ணீர் தொட்டுச் செல்லும் என்பது பெருமையாகக் குறிப்பிடத்தக்க செய்தியாகக் கூறப்படுகிறது. இத்தலத்துடன் இணைந்து சிவன், விநாயகர், நாகர் மற்றும் பாண்டி முனிசாமிகளுக்கு தனிச்சன்னதிகள் உள்ளது. அப்பகுதியில் பிரசி்த்தி பெற்ற இத்தலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.  
     
  தல வரலாறு:
     
 

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோயில் அமைக்க முடிவு செய்து வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாகவும், இதற்கென அவர்கள் தனியே ஆஞ்சநேயர் விக்ரகத்தினை ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து இங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத்தொடங்கியதாகவும் செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar