நவராத்திரி விழா 13 நாள் கொண்டாடப்படுகிறது. முதல் 9 நாட்களும், அம்பிகை ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருவாள். 11ம் நாளில் அம்பிகைக்கு சந்தனக்காப்பிடப்படும். கடைசி நாளன்று அம்பிகை புஷ்ப பல்லக்கில் புறப்பாடாவாள்.
தல சிறப்பு:
ஆதிகாமாட்சி சன்னதி முன்மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இதை "அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி 8.30 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.
பிரகாரத்தில் மடாலீஸ்வரர் லிங்கம், சப்தகன்னியர், நாகர், மகிஷாசுரமர்த்தினி உள்ளனர். அன்னபூரணியின் புடைப்புச் சிற்பமும் இருக்கிறது. ஒரு காலத்தில், மூலஸ்தானத்தில் இருந்த அம்பிகை, வீரியலட்சுமி என்ற பெயரில் தனி சன்னதியில் இருக்கிறாள்.
பக்தர்கள் ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்து, தீபமேற்றி வழிபடுகிறார்கள்
தலபெருமை:
பவுர்ணமி பூஜை:ஆதிகாமாட்சி பத்மாசனத்தில் தென்திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். கைகளில் பாசம், அங்குசம் மற்றும் அன்ன கிண்ணம் உள்ளது. காலுக்கு கீழே மூன்று அசுரர்களின் தலை இருக்கிறது. சன்னதி முகப்பில் ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. காலையில் ஸ்ரீசக்ரத்திற்கு பூஜை செய்தபின்பே, அம்பிகைக்கு பூஜை செய்வர். பவுர்ணமி இரவில் அம்பிகைக்கு விசேஷ பூஜை நடக்கும். பக்தர்கள் ஞாயிறு, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்து, தீபமேற்றி வழிபடுகிறார்கள். அம்பாள் சன்னதி முகப்பில் துவாரபாலகியர் மட்டும்தான் இருப்பர். இக்கோயிலில் முன்மண்டபத்தில் துவாரபாலகர்களும், அர்த்த மண்டபத்தில் துவார பாலகியரும் இருக்கின்றனர்.
திருமண வழிபாடு: ஆதிகாமாட்சி சன்னதி முன்மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இதை "அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமைய, வெள்ளிக்கிழமை காலை 10.30- 12 மணிக்குள் (ராகு காலம்) சக்தி லிங்கத்திற்கும், ஆதிகாமாட்சிக்கும் அபிஷேகம் செய்து தீபமேற்றுகின்றனர். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையவும், திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நைவேத்யம் செய்து வணங்குகின்றனர்.மூன்றும் தரும் அம்பிகையர்:உற்சவ அம்பிகையுடன் சரஸ்வதி, மகாலட்சுமி இருக்கின்றனர். இவர்களை வணங்க கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம். அம்பாள் சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நர்த்தன கணபதி, மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராஹ்மி, துர்க்கை உள்ளனர்.
தல வரலாறு:
அசுரர்கள் சிலர் தேவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தனர். அவர்கள் தங்களைக் காக்கும்படி பூலோகம் வந்து அம்பிகையை வேண்டி தவமிருந்தனர். அம்பிகை காளி வடிவம் எடுத்து அசுரர்களை சம்ஹாரம் செய்தாள். பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே எழுந்தருளினாள். போரிட்ட அம்பிகை உக்கிரமாக இருக்கவே, அவளைச் சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவள் "ஆதிகாமாட்சி' என்று பெயர் பெற்றாள். அம்பிகை காளி வடிவம் கொண்ட தலம் என்பதால் "காளி கோட்டம்' என்றும் பெயருண்டு.
ஒரு சிறுமியைத் தவிர வேறு யாராலும் அழிவு ஏற்படக்கூடாது என வரம் பெற்ற பண்டன் என்னும் அசுரன், தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள் அம்பிகையிடம் முறையிட, அவள் சிறுமியாக உருமாறி அசுரனை அழித்தாள். தேவர்களின் வேண்டுதலுக்காக காஞ்சிபுரத்தில் எழுந்தருளினாள். பக்தர்களின் 'காமம்' எனப்படும் விருப்பங்களை அருளும், கருணைக்கண் கொண்டவள் என்பதால் 'காமாட்சி' என பெயர் பெற்றாள். இந்தச் சொல்லை காமம் + அக்க்ஷி என பிரிக்க வேண்டும். 'அக்க்ஷி ' என்றால் 'கண்களைக் கொண்டவள்' எனப் பொருள்.
காமகோடி பீடம்: முப்பெரும் தேவியரின் அம்சமாக காமாட்சி அருளுகிறாள். 'கா' என்பது சரஸ்வதியையும், 'மா' லட்சுமியையும் குறிக்கும். உற்சவ அம்பிகையுடன் லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் இருக்கின்றனர். அம்பிகையின் திருநாமத்தை ஒருமுறை உச்சரித்தால், கோடி முறை சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இத்தலத்திற்கு 'காமகோடி பீடம்' என்ற பெயர் ஏற்பட்டது.
ஸ்ரீசக்ரம்: முற்காலத்தில் இங்கிருந்த காபாலிகள், அம்பிகைக்கு மிருகங்களை பலியிட்டு பூஜை செய்தனர். இதனால் அம்பாள் உக்கிரமாக இருந்தாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்கு புனருத்தாரணம் (புதுப்பித்து உருவேற்றுதல்) செய்து அம்பிகையை சாந்தப்படுத்தினார். அம்பிகையின் அருளால் 'சர்வக்ஞ பீடம்' (எல்லாம் தெரிந்தவர்) பட்டம் பெற்றார்.
பாத தரிசனம்: கோவில்களில் அம்பிகை ஒரு காலை மடித்து, மற்றொரு காலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருவாள். இதனால் அம்பிகையின் பாதத்தை தரிசிக்க முடியாது. இங்கு காமாட்சி கால்களை மடித்து அமர்ந்திருப்பதால் பாதங்களை நம்மால் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் பாவ விமோசனம் தரக்கூடியது. இவளது தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஆதிகாமாட்சி சன்னதி முன்மண்டபத்தில் சக்தி லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தின் பாணத்தில் அம்பிகையின் வடிவம் இருக்கிறது. இதை "அர்த்தநாரீஸ்வர லிங்கம்' என்றும் அழைக்கின்றனர்.