மாதக் கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், சித்திரை மாதப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகை.
தல சிறப்பு:
செவ்வாய் தோஷ தலம், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில்.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில்
மயிலாடுதுறை
நாகபட்டினம்.
பொது தகவல்:
ஆலயத்தில் நுழைந்தவுடன் சிறப்பு மண்டபம், எதிரே நந்தி மண்டபம், பலி பீடங்கள், அடுத்துள்ள மகா மண்டபத்தின் இடப்புறம் அன்னை தையல் நாயகி சன்னதி, கருவறையில் லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கிறார் வைத்தியநாத சுவாமி. அர்த்த மண்டப நுழைவாயிலில் விநாயகர் சன்னதி, மேற்குப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி. அடுத்து மகாலட்சுமியின் சன்னதி, தவிர பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர், சனி பகவான் சன்னதிகள்.
பிரார்த்தனை
செவ்வாய் தோஷம் நீங்கவும், கட்டியோ, தேமலோ அல்லது தோல் நோய் ஏதாவது தோன்றினால் அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வெல்லக் கட்டிகளை கொண்டுவந்து தீர்த்த குளத்தில் கரைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இந்த ஆலயத்திலுள்ள இறைவன், இறைவி முத்துக்குமார சுவாமி அனைவரின் சன்னதிகள் மட்டுமல்ல; பெயர்களும் செவ்வாய் தோஷம் போக்கும் நவகிரகத் தலமான வைத்தீஸ்வரன் கோயில் அமைப்பிலே அமைந்துள்ளன. மாதக் கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், சித்திரை மாதப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகை ஆகிய திங்களில் வைத்தீஸ்வரன், தையல்நாயகி மற்றும் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பழைமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது பழுதுபட்டுள்ளது. இரண்டு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.
தல வரலாறு:
பெற்றோரான உமையும் ஈசனும் நீராட, முருகன் தன் வேலைத் தூக்கி எறிந்து இடத்தில் உருவானதுதான் சுப்பிரமணிய நதி. தற்போது இதன் பெயர் மண்ணியாறு. ஆலயத்தின் தென்புறத்தில் இந்த வற்றாத நதி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:செவ்வாய் தோஷம் தலம், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில்.